ஐரோப்பா

பிரித்தானியாவில் குழாய் நீரை பயன்படுத்த கட்டுப்பாடு

பிரித்தானியாவின் சில பகுதிகளில் குழாய் நீர் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாடானது  நாளை (08.08)  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய டெவோன் (Devon) , கார்ன்வால் (Cornwall), டோர்செட் (Dorset) மற்றும் சோமர்செட்டின் (Somerset)  சில பகுதிகள் மற்றும் ஸில்லி தீவுகள் ( Isles of Scilly) முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்.

நீண்டகால வறண்ட வானிலை, சராசரியை விட கணிசமாகக் குறைவான மழைப்பொழிவு மற்றும் அதிக தேவை ஆகியவற்றின் காரணமாக இந்த கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுதல், வாகனங்களைக் கழுவுதல் அல்லது நீச்சல் குளங்களை நிரப்புதல் போன்ற செயல்பாடுகளுக்கு குழாய்களைப் பயன்படுத்துவதை இந்தக் கட்டுப்பாடுகள் தடை செய்கின்றன.

ஆனால் அத்தியாவசியப் பணிகளுக்கான சாதாரண நீர் பயன்பாடு அனுமதிக்கப்படுகிறது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்