இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

செம்மணியில் 100 நாள் அகழ்வு: 507 எலும்புக் கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுப்பதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்தநிலையில், இன்று 46 வது நாளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் போது, புதிதாக 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 7 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், செம்மணிப் புதைகுழியில் இதுவரையில் 100 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் மூலம், மொத்தம் 507 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 501 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை