செய்தி பொழுதுபோக்கு

முதல்வர் விஜயை குளிரவைத்த சமந்தாவின் பதிவு

தமிழக முதல்வர் விஜயை, நடிகை சமந்தா சந்தித்து வாழ்த்து கூறினார்.

தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்யை, நடிகை சமந்தா சென்னையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கத்தி, தெறி, மெர்சல் போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த நடித்தவர் சமந்தா.

எனினும், விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவரை , சமந்தா சந்திப்பது இது முதன்முறையாகும்.

முதலமைச்சரை சந்தித்த பிறகு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சமந்தா, மிகவும் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

” நான் சென்னைக்கு வந்தபோது, ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியை உணர்ந்தேன். ஏனெனில், நான் நமது முதலமைச்சரைச் சந்திக்கச் சென்றுகொண்டிருந்தேன்.

விஜய் சார் வெறும் திரையில் தோன்றும் ஹீரோவாக மட்டும் இருக்க வேண்டியவர் அல்ல என்பதை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்.

அவரது ஆற்றல், அவரது ஆளுமை மற்றும் மக்கள் அவர் மீது காட்டும் அன்பு ஆகியவை அவர் ஏதோ ஒரு பெரிய இடத்திற்குச் செல்லப் போகிறார் என்பதையே எனக்கு உணர்த்தின.” என்று சமந்தா குறிப்பிட்டுள்ளார்.

“தனது துறையில் உச்சத்தை எட்டி, எல்லாவற்றையும் சாதித்த பிறகு, அதை அப்படியே விட்டுவிட்டு சவால்கள் நிறைந்த ஒரு புதிய களத்தில் (அரசியல்) இறங்குவதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும்.

அது எளிதானது என்பதால் அல்ல, நம்மால் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையால்தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.” என நெகழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் சமந்தா.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி