செய்தி விளையாட்டு

கடைசி நொடியில் சாதித்தது கானா அணி

பனாமாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி கோலை அடித்த கானாவின் Caleb Yirenkyi வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது....

கனடாவின் டொராண்டோ மைதானத்தில் மழைக்கு மத்தியில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்து Group L லீக் போட்டியில், பனாமா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கானா அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் கூடுதல் நேரத்தில் (90+5′ நிமிடம்), கானா வீரர் கேலப் யிரென்கி Caleb Yirenkyi அடித்த அதிரடி கோல் அணியின் வெற்றியை உறுதி செய்தது.

கானா ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மைதானத்தில் இந்த வெற்றியைத் துள்ளிக் குதித்துக் கொண்டாடினர்.

ஆட்டத்தின் முதல் பாதியில் பனாமா அணி ஆதிக்கம் செலுத்தியது.

ஆட்டத்தின் 2-ஆவது நிமிடத்திலேயே பனாமாவின் சிசிலியோ வாட்டர்மேன் அடித்த பந்தை கானா கோல்கீப்பர் லாரன்ஸ் அதி ஜிகி (Lawrence Ati Zigi) திறம்பட தடுத்தார்.

முதல் பாதியில் கானா அணி ஒரு கோல் முயற்சியைக் கூட (Shot) எடுக்கவில்லை. உலகக் கிண்ண வரலாற்றில் இந்த ஆண்டில் இத்தகைய மோசமான சாதனையைப் பதிவு செய்த முதல் அணியாக கானா மாறியது.

கானாவின் கோல்கீப்பர் அதி ஜிகி காயம் காரணமாக விலகியதை அடுத்து பெஞ்சமின் அசாரே களம் புகுந்தார். இரண்டாவது பாதியில் கானா அணி ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்தது.

ஆட்டம் முடிய சில வினாடிகளே இருந்தபோது, கானா அணி தனது சொந்த பாதியில் இருந்து பந்தை வேகமாக கடத்திச் சென்றது.

பிரண்டன் தாமஸ்-அசாண்டே பந்தை பாக்ஸிற்குள் கடத்தி வந்து கொடுத்த அசிஸ்ட்டை (Pass), கேலப் யிரென்கி மிக நேர்த்தியாக கோல் வலையினுள் தள்ளினார்.

கானாவின் நட்சத்திர மிட்ஃபீல்டர் தாமஸ் பார்ட்டி (Thomas Partey) இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை.

லண்டனில் உள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகள் காரணமாக அவருக்கு கனடா விசா மறுக்கப்பட்டது.

எனினும், அமெரிக்காவில் நடக்கவுள்ள அடுத்த இரு போட்டிகளில் அவர் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற செவ்வாய்க்கிழமை நடைபெறும் அடுத்த லீக் போட்டிகளில் கானா அணி இங்கிலாந்தையும், பனாமா அணி குரோஷியாவையும் எதிர்கொள்ளவுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி