இலங்கை

சிறைச்சாலை கலவரங்களால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – சஜித் விசனம்

சிறைச்சாலைகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் பாதுகாப்பற்ற நிலைமை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று  (07) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

யார் என்ன தெரிவித்தாலும் இது தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும். அத்துடன் சிறைச்சாலைகளில் இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்களை அடிப்படையாகக்கொண்டு, நாங்கள் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷ நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவந்தோம்.

அதில் அமைச்சருக்கு ஆதரவாக 152 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டது. இதன் மூலம் அரசாங்கம் துள்ளிக்குதித்து வெற்றியை கொண்டாடியது.

ஆனால் நாங்கள் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்து அது தோற்கடிக்கப்பட்ட பின்னர், மஹர சிறைச்சாலையில் பிரச்சினை ஏற்பட்டது.

கொழும்பு மெகசினில் நேற்று முன்தினம் பிரச்சினை ஏற்பட்டது, தற்போது குருவிட்ட மற்றும் பல்லன்சேனையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்