உலகம்

வடகொரியாவின் உதவியை நாடிய தென்கொரியா – பின்னணி என்ன?

  • July 13, 2026
  • 0 Comments

வடகொரியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையே உள்ள கிழக்கு கடல்பகுதியில் தென்கொரிய மாலுமி ஒருவர் காணாமல்போயுள்ளார். கடலோர காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த அதிகாரி காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் வடக்கு எல்லைக் கோட்டைக் கடந்து வட கொரிய கடல் பகுதிக்குள் சென்றிருக்க வாய்ப்புள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் தென்கொரிய அதிகாரிகள் குறித்த மாலுமியை  தேட வடகொரியாவின் உதவியை நாடியுள்ளனர். தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நேரடித் தொடர்பு இல்லாததால், இந்த வேண்டுகோள் பியோங்யாங்கிற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தென் […]

உலகம்

பாதுகாப்பு மண்டலத்தை மீறி வடகொரியாவில் இருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர்

  • June 25, 2026
  • 0 Comments

வடகொரியாவில் முக்கிய இராணுவ மண்டலத்தை கடந்து  இராணுவ வீரர் ஒருவர் தென்கொரியாவிற்குள் புகுந்துள்ளதாகவும், அங்கு அவர் காவலில் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போது அவரிடம்  விசாரனை செய்து வருவதாக  தென் கொரியாவின் கூட்டுப் படைத் தளபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த இராணுவமயமற்ற மண்டலம், முள்வேலிகள், கண்ணிவெடிகள் மற்றும் விரிவான கண்காணிப்பு ஆகியவற்றால் பலப்படுத்தப்பட்டுள்ளது. இது உலகின் மிகவும் இறுக்கமாகப் பாதுகாக்கப்பட்ட எல்லைகளில் ஒன்றாக விளங்குகிறது. இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள குறித்த இராணுவ மண்டலத்தையும் மீறி அவர் […]

உலகம்

ஆசியாவில் சிறந்த போர் நாடாக” மாறி வரும் ஜப்பான் – வடகொரியா கண்டனம்

  • June 23, 2026
  • 0 Comments

ஜப்பான் ஒரு “போர் நாடாக” மாறி வருவதை வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் கண்டித்துள்ளார். அதேநேரம் பியோங்யாங்கின் இராணுவப் பாதுகாப்பை விரிவுபடுத்தவும் கிம் அழைப்பு விடுத்துள்ளார். ஜப்பான், தற்போதைய குழப்பமான சூழ்நிலைகளை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, தன்னை ஒரு இராணுவ சக்தியாக மாறுவதைத் தடுக்கும் அனைத்துத் தடைகளையும் அகற்றி போர் நாடாக உருவெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் சனே டகாயிச்சியின் ( Sanae Takaichi)  கீழ், ஜப்பான் தனது சமாதானக் கொள்கையிலிருந்து விலகியுள்ளது. […]

உலகம் முக்கிய செய்திகள்

வடகொரியாவின் முக்கிய அறிவிப்பு : விரைந்து செல்லும் சீன ஜனாதிபதி!

  • June 5, 2026
  • 0 Comments

சீனத் தலைவர் ஷி ஜின்பிங் அடுத்த வாரம் வட கொரியாவிற்குப் பயணம் மேற்கொள்வார் என இரு நாடுகளும் இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளன. வரும் திங்கட் கிழமை வடகொரியா செல்லும் ஷி  ஜின்பிங், செவ்வாய்க்கிழமை வரை அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என இரு நாடுகளின் அரசு ஊடகங்களும் சுருக்கமான செய்திகளில் தெரிவித்துள்ளன. அணு ஆயுதங்களைக் கொண்ட தனது அண்டை நாடான வட கொரியாவுடன் நெருங்கிய உறவுகளை வலுப்படுத்த சீனா எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக […]

உலகம்

ஏவுகணை அமைப்பில் AI தொழில்நுட்பம் : முதல் முறையாக ஒப்புக்கொண்ட வடகொரியா!

  • May 27, 2026
  • 0 Comments

வட கொரியா தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை  பயன்படுத்தியுள்ளது. அரசு நடத்தும் கே.சி.என்.ஏ செய்தி நிறுவனம்  இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட இலகுரக பல்நோக்கு ஏவுகணை ஏவுதல் அமைப்பு மற்றும் பல தந்திரோபாய பயண ஏவுகணை ஆயுத அமைப்பு” ஆகியவற்றைச் சோதிப்பதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. “சோதனை முடிவுகளை  பாராட்டிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்,  தொழில்நுட்ப பயன்பாடு குறித்து மிகவும் திருப்தியடைந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா செய்தி

வடகொரியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் : ஸ்டாமரின் அறிவிப்பால் சலசலப்பு!

  • May 20, 2026
  • 0 Comments

பிரித்தானியா வடகொரியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளதாக பிரதமர் ஸ்டாமர் அறிவித்ததை தொடர்ந்து கொமன்ஸ் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. கொமன்ஸ் அவை இன்று ஆரம்பமாகிய நிலையில், பிரதமர் ஸ்டாமர் லிபரல் டெமாக்ரட் தலைவர் சர் எட் டேவிக்கு ( Sir Ed Davey) பதிலளித்துக்கொண்டிருந்தார். இதன்போது தனது அரசாங்கம் பல்வேறு நாடுகளுடன் செய்துள்ள ஒப்பந்தங்களை அவர்பட்டியலிட்டார். இந்நிலையில் தென்கொரியாவுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தங்களை பட்டியலிடுவதற்கு பதிலாக வடகொரியாவின் பெயரை அறிவித்தார். இதனால் சபையில் சிலமணிநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

உலகம் செய்தி

வடகொரியாவில் தென்படும் ஆரோக்கியமான மாற்றம்!! அணுவாயுதங்களுக்கு பின்னுள்ள உலகம்!

  • May 13, 2026
  • 0 Comments

வடகொரியாவில் தென்படும் ஆரோக்கியமான மாற்றம்!! அணுவாயுதங்களுக்கு பின்னுள்ள உலகம்! வடகொரியாவில் வாகன நிறுத்துமிடத்தை பெறுவதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தலைநகர் பியோங்யாங்கில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வாகன பெருக்கம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது, நகரில் முதல் முறையாகப் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுத்துள்ளதுடன், புதிய வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் மின்சார வாகன மின்னேற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை அவசியமாக்கியுள்ளது. இந்த மாற்றம், சமீபத்தில் அங்கு வருகை தந்த மூன்று பார்வையாளர்கள் மற்றும் ராய்ட்டர்ஸ் ஆய்வு […]

உலகம்

அரசியல் அமைப்பு திருத்தம் : அணுவாயுதங்கள் மீதான அதிகாரம் கிம் வசம்!

  • May 6, 2026
  • 0 Comments

வட கொரியா தனது அரசியலமைப்பைத் திருத்தியுள்ளது. இதன் மூலம், அதன் பிராந்தியத்தை வெளிப்படையாக வரையறுத்து, நாட்டின் அணு ஆயுதங்கள் மீதான அதிகாரத்தை தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு வழங்கியுள்ளது. பிரிவு 6-இல் உள்ள ஒரு புதிய உட்பிரிவு, அணு ஆயுதப் படைகள் மீதான கட்டளை அதிகாரம் தலைவருக்கே உரியது என்றும், அவர் அணு ஆயுதப் பயன்பாட்டு அதிகாரத்தைப் பிறருக்கு வழங்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. திருத்தப்பட்ட இந்த அரசியலமைப்பில், தென் கொரியாவுடன் மீண்டும் இணைவது குறித்த முந்தைய அனைத்துக் […]

உலகம்

இணையவழி அச்சுறுத்தல் – வடகொரியா மீது குற்றச்சாட்டு!

  • May 3, 2026
  • 0 Comments

பியோங்யாங் இணையவழி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை வட கொரிய வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது. வொஷிங்டனின் நீண்டகால விரோதக் கொள்கையை நியாயப்படுத்தும் நோக்கில் இந்த குற்றச்சாட்டு புனையப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். வட கொரியாவிலிருந்து “இல்லாத ‘இணையவழி அச்சுறுத்தல்’” இருப்பதாக அமெரிக்கா அரசியல் நோக்கங்களுக்காக தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்தக் குற்றச்சாட்டுகள் “நமது நாட்டின் நற்பெயரைக் கெடுக்கும் ஒரு அபத்தமான அவதூறு தவிர வேறொன்றுமில்லை” என்றும் விவரித்துள்ளது.

உலகம்

ஆசிய நாடுகளுக்கு பயணிக்கவுள்ள ட்ரம்ப் – பால்ஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா!

  • October 22, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென்கொரியாவிற்கு பயணமாகவுள்ளார். இந்நிலையில் வடகொரியா இன்றைய தினம் புதிய பால்ஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது. தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் இது தொடர்பான கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை. இருப்பினும் அமெரிக்காவுடனான அதன் உறுதியான இராணுவ கூட்டணியின் அடிப்படையில் வட கொரியாவின் எந்தவொரு ஆத்திரமூட்டலையும் தடுக்க தென் கொரியாவின் இராணுவம் தயாராக உள்ளது எனத் தெரிவித்துள்ளது. இந்த சோதனை நடவடிக்கை எதற்காக முன்னெடுக்கப்பட்டது என்ற தகவலை வடகொரியா வெளியிடவில்லை என்பதும் […]