இலங்கை செய்தி

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்ட ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்

காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு, இந்திய- இலங்கை அமைச்சரவைகளின் அங்கீகாரம் பெறப்படுவது மட்டுமே எஞ்சியுள்ளதாக துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு, இந்திய- இலங்கை அமைச்சரவைகளின் அங்கீகாரம் பெறப்படுவது மட்டுமே எஞ்சியுள்ளதாக துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 65 மில்லியன் டொலர் நிதியுதவியை கொடையாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக,

“காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணியில் எந்தத் தடங்கலும் இல்லை. உடன்பாடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது; கையெழுத்திடும் நிகழ்வும் இறுதி நிலையை அடைந்துள்ளது.

இந்தியத் தூதரகமும் எந்தவிதத் தடைகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டம் இந்தியா வழங்கும் முழுமையான மானியத்தின் மூலம் முன்னெடுக்கப்படும், முன்னதாக வழங்கப்பட்ட கடன் வசதி இப்போது மானியமாக மாற்றப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் பல்வேறு தரப்பினருடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதன் பின்னணியில், புரிந்துணர்வு உடன்பாட்டின் நிபந்தனைகள் குறித்து இரு அரசாங்கங்களுக்கு இடையே உடன்பாட்டை எட்டுவதில் ஏற்பட்ட காலதாமதமே இந்தத் தாமதத்திற்குக் காரணம்.

இலங்கை தரப்பில் பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, சட்ட வரைவுத் திணைக்களம் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினர் இதில் பங்கேற்றனர்.

பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன, இருப்பினும் தற்போது இது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த முன்மொழியப்பட்ட ஏற்பாட்டின்படி, இரு தரப்பினருக்கும் இடையிலான பங்களிப்பு 50-50 என்ற விகிதத்தில் இருக்கும். செயல்பாட்டுக் காலம் 25 ஆண்டுகளாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும், உடன்பாடு முழுமையாக இறுதி செய்யப்படுவதற்கு முன்பாக நிபந்தனைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நிதியுதவியை சிறிலங்கா திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

முந்தைய கடன் வசதித் திட்டத்தின் கீழ் ஆரம்பகட்ட ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப வடிவமைப்புகளுக்காக இந்தியா பணம் செலுத்தியுள்ளது. அதற்காக சுமார் 2 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டது என்றும் அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை