வடகொரியாவின் உதவியை நாடிய தென்கொரியா – பின்னணி என்ன?
வடகொரியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையே உள்ள கிழக்கு கடல்பகுதியில் தென்கொரிய மாலுமி ஒருவர் காணாமல்போயுள்ளார்.
கடலோர காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த அதிகாரி காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் வடக்கு எல்லைக் கோட்டைக் கடந்து வட கொரிய கடல் பகுதிக்குள் சென்றிருக்க வாய்ப்புள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் தென்கொரிய அதிகாரிகள் குறித்த மாலுமியை தேட வடகொரியாவின் உதவியை நாடியுள்ளனர்.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நேரடித் தொடர்பு இல்லாததால், இந்த வேண்டுகோள் பியோங்யாங்கிற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் பத்திரிகையாளர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி மூலம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் தற்போதுவரை வடகொரிய அதிகாரிகள் இதற்கு பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
தென் கொரிய அதிபர் லீ ஜே-ம்யுங் கடந்த ஆண்டு பதவியேற்றதிலிருந்து வட கொரியாவுடனான பதற்றத்தைத் தணிக்க முயன்று வருகிறார், ஆனால் வட கொரியா அத்தகைய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
மேலும், 2024-ல், வட கொரியா தென் கொரியாவை அதிகாரப்பூர்வமாக “எதிரி நாடு” என்று அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




