உலகம்

கிழக்கு கடலில் வடகொரியா ஏவுகணை சோதனை – உன்னிப்பாக கவனிக்கும் ஆசிய நாடுகள்

  • September 12, 2026
  • 0 Comments

வடகொரியா இன்று கிழக்கு கடலுக்கு அப்பால் குறுகிய தூரம் பாயும் பல ஏவுகணைகளைச் செலுத்தி சோதனை செய்ததாக தென்கொரிய இராணுவம் அறிவித்துள்ளது. வொன்சான் (Wonsan) பகுதியிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் சுமார் 250 கி.மீ (155 மைல்) தூரம் பயணித்ததாக தென் கொரியாவின் கூட்டுத் தலைமைப் படைப்பிரிவு (JCS) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏவுகணைகளின் தொழில்நுட்ப விவரங்கள் குறித்து தென் கொரியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் விரிவான பகுப்பாய்வை மேற்கொண்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் […]

உலகம்

கொரிய எல்லையில் பதற்றம் – தென்கொரியாவை ஊடுருவும் வடகொரியா

  • September 9, 2026
  • 0 Comments

வட மற்றம் தென்கொரியாவை  பிரிக்கும் இராணுவ எல்லைக் கோட்டைத் தாண்டி வட கொரியப் படைகள் ஊடுருவுவது உள்ளிட்ட செயற்பாடுகளை கண்காணித்து வருவதாக  தென்கொரிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பதிலடி கொடுக்க தேவையான  , உறுதியான இராணுவத் தயார்நிலையில்  இருப்பதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் வட கொரியப் படைகள் இராணுவ எல்லைக் கோட்டை 20 முறைகளுக்கும் மேலாக கடந்து சென்றுள்ளதாக ‘சோசுன் இல்போ’ (Chosun Ilbo) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்திக்கு இராணுவம் இன்று பதிலளித்துள்ள […]

உலகம்

வடகொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்

  • August 30, 2026
  • 0 Comments

வடகொரியாவின் உயர்மட்ட இராணுவத் தலைமையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் நோ குவாங்-சோல் பதவியில் இருந்தும் கட்சியின் மத்திய தலைமைப் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கொரிய மக்கள் இராணுவத்தின் பொது அரசியல் பணியகத்தின் இயக்குநரும், மூத்த இராணுவ அதிகாரியுமான கிம் சோங்-கி, புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இது பியோங்யாங்கின் இராணுவத் தலைமையில் ஏற்பட்ட பாரிய மாற்றமாக கருதப்படுகிறது. அமெரிக்க-தென்கொரிய இராணுவப் பயிற்சிகள் தொடர்பாக அதிகரித்துள்ள பதட்டங்களுக்கு மத்தியில், இந்த மாற்றங்கள் […]

உலகம்

கிழக்கு கடலில் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதித்த வடகொரியா

  • August 12, 2026
  • 0 Comments

வடகொரியா இன்றைய தினம் கடலைநோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவி சோதனை செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தென் கொரிய ராணுவத்தை மேற்கோள் காட்டி, வட கொரியா தனது கிழக்கு கடற்கரைக்கு அப்பால் அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை சுட்டதாக ஜப்பான் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரியா இந்த மாதத்தில் முற்கொள்ளும் இரண்டாவது ஏவுகணை சோதனை இதுவாகும். அமெரிக்காவும், தென்கொரியாவும் அடுத்த வாரம் வருடாந்திர போர் பயிற்சியை மேற்கொள்ளவுள்ள […]

உலகம்

கடும் வெப்ப அலையுடன் போராடும் வடகொரியா – பாராம்பரிய உணவு முறையை பின்பற்ற அறிவுறுத்தல்

  • August 7, 2026
  • 0 Comments

வடகொரியா வரலாறு காணாத வெப்ப அலையுடன் போராடி வருகிறது. அந்நாட்டில் தற்போது 36.7 டிகிரி செல்சியஸ் (98.1 டிகிரி ஃபாரன்ஹீட்) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடும் வெப்பத்தைச் சமாளிக்க, வட கொரிய அரசு ஊடகங்கள் பாராம்பரியமான உணவு முறைகளை உட்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றன. உதாரணமாக, நாய்க்கறி சூப்,   தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற குளிர்ச்சி தரும் உணவுகள் உட்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளன. அதேநேரம் அந்நாட்டின் அரச ஊடகங்கள், கிம் ஜாங் உன்னை, தனது மக்களுடன் சேர்ந்து கடுமையான சூழ்நிலைகளைத் தாங்கிக்கொள்ளும் […]

உலகம்

கிழக்கு கடற்பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா

  • August 6, 2026
  • 0 Comments

வட கொரியா இன்றைய தினம் கிழக்கு கடற்பகுதியில் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையைச் செலுத்தி சோதனை செய்ததாக தென்கொரிய இராணுவம் அறிவித்துள்ளது. பியோங்யாங் ஏவிய ஏவுகணை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என்று ஜப்பான் அரசாங்கம் கூறியுள்ளது. வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் சக்திவாய்ந்த சகோதரியான கிம் யோ ஜாங், ஜப்பானின் டோமஹாக் ஏவுகணைச் சோதனைகள் மற்றும் அதன் இராணுவ லட்சியங்கள் குறித்து சமீபத்தில் கடும் விமர்சனம் தெரிவித்ததை தொடர்ந்து இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது. […]

உலகம்

வடகொரியாவை இணைக்கும் ரயில் பாதையை புனரமைக்க தென்கொரியா திட்டம்

  • August 5, 2026
  • 0 Comments

2015-ல் தொடங்கப்பட்டு 2016-ல் இடைநிறுத்தப்பட்ட, கியோங்வோன் (Gyeongwon) ரயில் பாதையை புனரமைக்கும் பணியை தென்கொரியா மீண்டும் தொடங்கவுள்ளது. இந்த ரயில் பாதையானது, இறுதியில் வட கொரியாவின் கிழக்கு நகரமான வொன்சானுடன் (Wonsan ) இணைவதையும், இராணுவமயமற்ற மண்டலத்தில் உள்ள அமைதி மற்றும் சூழலியல் சுற்றுலாத் தளங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பியாங்யாங், தென் கொரியாவை ஒரு விரோத நாடாக மறுவரையறை செய்யும் விதமாக, 2024-ல் எல்லை தாண்டிய சாலை மற்றும் ரயில் இணைப்புகளை தகர்த்ததைத் தொடர்ந்து […]

உலகம்

அணுவாயுத உற்பத்தியை அதிகரிக்கும் வடகொரியா – அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் எச்சரிக்கை

  • July 31, 2026
  • 0 Comments

வடகொரியாவின் தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள் பிற நாடுகளில் பணியமர்த்தப்படுவதற்கு எதிராக அமெரிக்காவும் 10 ஆசிய மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகளும் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளன. வடகொரிய அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்காக இந்த முறையை கையாள்வதாகவும், இதன்மூலம் பெறப்படும் வருவாய் நாட்டின் அணுவாயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதாகவும் அந்நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையில், வட கொரியாவின் சட்டவிரோத அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக” அந்நாடு திறமையான தொழிலாளர்களைப் போலி அடையாளங்களின் […]

உலகம்

“முதலில் அமைதி” – வடகொரியாவுடன் உறவை புதுப்பிக்க தென்கொரியா முனைப்பு

  • July 23, 2026
  • 0 Comments

வட கொரியாவுடனான உறவில், ‘முதலில் அணு ஆயுத ஒழிப்பு’ என்ற கொள்கையைக் கைவிட்டு, ‘முதலில் அமைதி’ என்ற அணுகுமுறையை தென் கொரியா பின்பற்றுவதாக ஒருங்கிணைப்பு அமைச்சர் சுங் டோங்-யங் (Chung Dong-young)   தெரிவித்துள்ளார். அதே சமயம் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்றதாக மாற்றும் இறுதி இலக்கை அந்நாடு தக்கவைத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அணு ஆயுத ஒழிப்பு என்ற இறுதி […]

உலகம் முக்கிய செய்திகள்

எந்தவொரு பதற்றத்திற்கும் வொஷிங்டன் பொறுப்பேற்க வேண்டும் – வடகொரியா சவால்

  • July 17, 2026
  • 0 Comments

அமெரிக்கா தலைமையிலான கடற்படைப் பயிற்சியில் தென்கொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து, அந்நாட்டை ஒரு “கைப்பாவை” என்று வடகொரிய அரசு ஊடகங்கள் விமர்சித்துள்ளன. அப்பகுதியில் ஏற்படக்கூடிய எந்தவொரு “கணிக்க முடியாத பதற்றத்திற்கும்” சியோலும் வொஷிங்டனும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வடகொரிய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் சமீபத்தில் தென்கொரிய-ஜப்பானிய இராணுவ ஒத்துழைப்பும், நேட்டோவுடனான தென்கொரியாவின் உறவும் வலுப்பெற்று வருவதையும் வடகொரியா சாடியுள்ளது. கடந்த வாரம் ஹவாயில் நடைபெற்ற பசிபிக் விளிம்புப் பயிற்சிக்குப் (RIMPAC) பிறகு, வடகொரியாவின் இந்த விமர்சனம் வந்துள்ளது. இந்தப் […]