ஏவுகணை அமைப்பில் AI தொழில்நுட்பம் : முதல் முறையாக ஒப்புக்கொண்ட வடகொரியா!
வட கொரியா தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது.
அரசு நடத்தும் கே.சி.என்.ஏ செய்தி நிறுவனம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட இலகுரக பல்நோக்கு ஏவுகணை ஏவுதல் அமைப்பு மற்றும் பல தந்திரோபாய பயண ஏவுகணை ஆயுத அமைப்பு” ஆகியவற்றைச் சோதிப்பதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“சோதனை முடிவுகளை பாராட்டிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தொழில்நுட்ப பயன்பாடு குறித்து மிகவும் திருப்தியடைந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலக்குகளை அடையாளம் கண்டு குறிவைக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதை வடகொரியா முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




