ஐரோப்பா

ஐரோப்பிய அரசுகளை கவிழ்க்கும் முயற்சியில் Gen Z தலைமுறையினர் – ஜெர்மனியிலும் போராட்டம் வெடிப்பு

ஜெர்மனியின் மிகப்பெரிய நகரங்களில், சிறந்த கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகளைக் குறைக்கும் கோரிக்கைகளை வலியுறுத்தி பாரிய போராட்டம் ஒன்ற முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் பிராங்பேர்ட் நகரில் அணித்திரண்ட பல்லாயிரக்கணக்கானோர் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக துண்டு பிரச்சூரங்களையும் ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றனர்.

குறிப்பாக கட்டாய இராணுவ சேவையை நீக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் இந்த போராட்டத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

‘ஜென் இசட் ரெகெல்ட்’ (Gen Z regelt – “ஜென் இசட் பொறுப்பேற்கிறது” என்று பொருள்) என்ற அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் போராட்டங்கள், பெர்லின், பிராங்பேர்ட் மற்றும் மியூனிக் உள்ளிட்ட 34 நகரங்களில் நடைபெற்றன.

இதேவேளை இந்த ஆண்டு ஐரோப்பா முழுவதும் ‘ஜென் இசட்’ (Gen Z – இளைய தலைமுறை) முன்னெடுத்த போராட்டங்களின் தொடர்ச்சியாகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செர்பியாவில், மாணவர் தலைமையிலான போராட்டங்கள் நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த தலைவரைத் தேர்தலில் தோற்கடிக்க உதவின.

அதே சமயம் பிரான்சில் நடைபெற்ற போராட்டங்கள் கலவரமாகவும், கொள்ளைச் சம்பவங்களாகவும் மாறின.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்