பாதுகாப்பு மண்டலத்தை மீறி வடகொரியாவில் இருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர்
வடகொரியாவில் முக்கிய இராணுவ மண்டலத்தை கடந்து இராணுவ வீரர் ஒருவர் தென்கொரியாவிற்குள் புகுந்துள்ளதாகவும், அங்கு அவர் காவலில் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போது அவரிடம் விசாரனை செய்து வருவதாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தளபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இராணுவமயமற்ற மண்டலம், முள்வேலிகள், கண்ணிவெடிகள் மற்றும் விரிவான கண்காணிப்பு ஆகியவற்றால் பலப்படுத்தப்பட்டுள்ளது. இது உலகின் மிகவும் இறுக்கமாகப் பாதுகாக்கப்பட்ட எல்லைகளில் ஒன்றாக விளங்குகிறது.
இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள குறித்த இராணுவ மண்டலத்தையும் மீறி அவர் தப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம் தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் தரவுகளின்படி, 1998-ல் பதிவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து, 899 இராணுவ வீரர்கள் உட்பட 34,000-க்கும் மேற்பட்ட வட கொரியர்கள் தெற்கிற்குத் தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





