செய்தி விளையாட்டு

கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி!

  • May 25, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 70 ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. பின்னர் 204 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி […]

ஆஸ்திரேலியா செய்தி

சிட்னி பயங்கரவாதத் தாக்குதல்: விசாரணையில் சிக்கிய ஆஸ்திரேலிய உளவுப் பிரிவு!

  • May 25, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, சிட்னி – Bondi கடற்கரையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் ஆரம்பமான 29 வினாடிகளுக்குள் 11 பேர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக மேற்படி படுகொலை குறித்து விசாரிக்கும் அரச ஆணைக்குழுவில் (Royal Commission) தெரிவிக்கப்பட்டுள்ளது. யூத எதிர்ப்பு மற்றும் சமூக ஒற்றுமை குறித்த அரச ஆணைக்குழு (Royal Commission , கடந்த 2025 டிசம்பர் 14 அன்று Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சூழ்நிலைகளை ஆராயும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த கொடூரத் தாக்குதலில் […]

அரசியல் இலங்கை செய்தி

“புலி டயஸ்போராக்களிடம் மண்டியிடவில்லை” – விமல் கொக்கரிப்பு!

  • May 25, 2026
  • 0 Comments

“ இராணுவ நினைவு தூபி முன்பாகவே நான் தடுக்கி விழுந்தேன். மாறாக புலி டயஸ்போராக்களின் பாதங்களில் அல்ல.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ அரசாங்கமானது IMF முன்னிலையில் மண்டியிட்டுள்ளது. புலி டயஸ்போராக்களின் முன் விழுந்துள்ளது. அவ்வாறு விழுந்திருப்பதுதான் வெட்கப்பட வேண்டிய விடயம். ஆனால் ராணுவ நினைவு தூபி முன்னிலையிலேயே நான் விழுந்தேன். இது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். ராணுவ நினைவு […]

உலகம் செய்தி

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் தயார் நிலையில்: விரைவில் பேச்சு!

  • May 24, 2026
  • 0 Comments

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் தயார் நிலையில் இருப்பதாகவும், இதுகுறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். புதிய இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் ‘ஹார்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) மீண்டும் திறக்கப்படுவது இணக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். ” சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் இதர நாடுகளின் தலைவர்களுடன் “அமைதி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்” (Memorandum of Understanding) குறித்து “மிகவும் நல்ல முறையில் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளேன்.” என […]

இலங்கை செய்தி

நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் விஜித ஹேரத்!

  • May 24, 2026
  • 0 Comments

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். மேற்படி இரு நாடுகளும் விடுத்த அழைப்பின் பிரகாரமே அவர் எதிர்வரும் மே 26 முதல் ஜூன் 3 ஆம் திகதி வரை இவ்விஜயத்தை மேற்கொள்கின்றார். நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் மற்றும் ஆஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் ஆகியோருடன் இரு தரப்பு சந்திப்பில் ஈடுபடவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர் கலந்துரையாடவுள்ளார். […]

இலங்கை செய்தி

தமிழர் விடயத்தில் ராஜபக்ச வழியிலேயே அநுர: இடதுசாரி தலைவர் குற்றச்சாட்டு!

  • May 24, 2026
  • 0 Comments

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டத்தில் ராஜபக்ச அரசாங்கம் கையாண்ட சில்லறைத்தனமான அணுகுமுறையையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பின்பற்றிவருகின்றது என்று ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் குறித்து வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “வீதி அமைத்தல், பாலம் அமைத்தல் போன்ற அபிவிருத்தி திட்டங்களே தேசிய இனப்பிரச்சினைக்கான அணுகுமுறையென ராஜபக்ச அரசாங்கம் கருதியது. ஆனால் அந்த சில்லறைத்தனமான அணுகுமுறையை […]

இலங்கை செய்தி

கொழும்பில் களமிறங்கியுள்ளனரா FBI குழுவினர்?

  • May 24, 2026
  • 0 Comments

விசாரணையின் நிமித்தம் FBI சிறப்புக் குழுவினர் எவரும் இலங்கைக்கு அனுப்பப்படவில்லை என்று இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் இணையவழித் திருட்டு மற்றும் அமெரிக்க அஞ்சல் அதிகாரிகளுக்குச் செலுத்த வேண்டியிருந்த மேலும் 625,000 டொலர் திருட்டு ஆகியவற்றை விசாரிப்பதற்காக FBI அதிகாரிகள் கொழும்பு வந்துள்ளனர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியை அமெரிக்க தூதரகம் மறுத்துள்ளது. இது தொடர்பில் தூதரகம் விடுத்துள்ள மறுப்பறிக்கையில், “ பல நாடுகளில் உள்ள வழக்கமான […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் பிரதான கட்சிகளுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ள ‘சிறு கட்சி’!

  • May 24, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் தற்போதைய சூழலில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால், வலதுசாரி கொள்கையுடைய பாலின் ஹான்சனின் One Nation கட்சி நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் என புதிய கருத்துக்கணிப்பு   மூலம் தெரியவந்துள்ளது. பாரம்பரிய எதிர்க்கட்சிக் கூட்டணியான லிபரல் மற்றும் நேஷனல் கட்சிகள்  முழுமையாகத் துடைத்தெறியப்படும் துடைத்தெறியப்படக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ரெட்பிரிட்ஜ் குரூப் மற்றும் ஆக்சென்ட் ரிசர்ச் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 6,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களிடம் நடத்திய ஆய்வை அடிப்படையாகக் கொண்டே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் […]

செய்தி விளையாட்டு

அபார வெற்றியுடன் play-off வாய்ப்பில் நீடிக்கும் பஞ்சாப் கிங்ஸ்!

  • May 24, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 68-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. பின்னர் 197 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, ஸ்ரேயஸ் […]

செய்தி

அமைதி முயற்சிக்கு இந்தியா முழு ஆதரவு!

  • May 23, 2026
  • 0 Comments

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ Marco Rubio, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது பாதுகாப்பு, தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, இணைப்பு, கல்வி மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான முன்னேற்றம் குறித்து பிரதமருக்கு மார்கோ ரூபியோ விளக்கமளித்துள்ளார். மேற்கு ஆசிய போர் நிலைவரம் உட்பட பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த அமெரிக்காவின் கண்ணோட்டத்தை இந்திய […]