இலங்கை செய்தி

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 236 குற்றவாளிகள் வெளிநாடுகளில்

சர்வதேசப் பொலிஸாரினால் (இண்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 236 குற்றவாளிகள் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர் என்றும், அவர்களில் 97 பேர் பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்கள் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

சர்வதேசப் பொலிஸாரினால் (இண்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 236 குற்றவாளிகள் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர் என்றும், அவர்களில் 97 பேர் பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்கள் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வில், வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சர்வதேசப் பொலிஸாரின் வழிகாட்டல்கள் மற்றும் இரகசியத் தன்மையைப் பேணும் நோக்கத்தின் காரணமாக, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்களையோ அல்லது அவர்கள் தங்கியுள்ள நாடுகளின் விவரங்களையோ பகிரங்கப்படுத்த முடியாது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

1977 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்கக் கைதிகள் பரிமாற்றச் சட்டம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களின் பிரகாரம், வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள இந்தக் குற்றவாளிகளை நாட்டுக்கு மீண்டும் அழைத்து வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குற்றக் குழுக்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் தொடர்பான தரவுகளையும் அமைச்சர் சபையில் சமர்ப்பித்தார்.

01. 2020ஆம் ஆண்டில் 2 படுகொலைகள்
02. 2021ஆம் ஆண்டில் 4 படுகொலைகள்
03. 2022ஆம் ஆண்டில் 23 படுகொலைகள்
04. 2023ஆம் ஆண்டில் 16 படுகொலைகள்
05. 2024ஆம் ஆண்டில் 42 படுகொலைகள்
06. 2025ஆம் ஆண்டில் 29 படுகொலைகள்
07. 2026ஆம் ஆண்டில் 18 படுகொலைகள்

அதன்படி, கடந்த சில வருடங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களினால் மொத்தம் 136 மனிதப் படுகொலைகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் சுட்டிக்காட்டினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை