ஆஸ்திரேலியா உலகம் செய்தி

இரு கால்களும் அகற்றப்பட்டன; ஆஸ்திரேலிய பெண் எம்.பி.யின் உடல்நிலை சீராகிறது

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு விக்டோரியாவில் கார் மோதியதில் படுகாயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு விக்டோரியாவில் கார் மோதியதில் படுகாயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

65 வயதான சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான ஹெலன் ஹெய்ன்ஸ், மெல்பேர்னுக்கு வடகிழக்கே அமைந்துள்ள வங்கரட்டா நகரில் உள்ள தனது தொகுதி அலுவலகத்துக்கு வெளியே கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சம்பவத்தில் படுகாயமடைந்தார். அதிகாரிகளின் கூற்றுப்படி, இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

இந்தச் சம்பவத்தில் அவரது இரு கால்களும் அகற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், சனிக்கிழமை காலை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், ஹெலன் ஹெய்ன்ஸின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையிலிருந்து தீவிரமானதாக இருந்தாலும் தற்போது சீராக உள்ள நிலைக்கு முன்னேறியுள்ளதாக மெல்பேர்னில் உள்ள அல்பிரட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அவர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னர் பதிவான முதல் முன்னேற்றம் இதுவாகும்.

மூன்று குற்றச்சாட்டுகளில் சந்தேகநபர் மீது வழக்குப் பதிவு
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் 43 வயதான பிரெண்டன் நுஜென்ட், சம்பவம் இடம்பெற்ற சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டார். அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் மீது தனது டொயோட்டா லேண்ட்க்ரூஸர் வாகனத்தை மோதியதாகக் குற்றஞ்சாட்டப்படும் அவர், ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தி கடுமையான காயத்தை ஏற்படுத்தியமை, வேண்டுமென்றே கடுமையான காயத்தை ஏற்படுத்தியமை மற்றும் பொதுநலவாய அரச அதிகாரி ஒருவருக்குத் தீங்கு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் சில குற்றச்சாட்டுகள், குறிப்பாக கொலை முயற்சிக் குற்றச்சாட்டு, பதிவு செய்யப்படலாம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கு மனநலம் தொடர்பான பிரச்சினைகள் இருப்பதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். எனினும், அது தொடர்பான மேலதிக விபரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.

தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை
விக்டோரியா பொலிஸார், அவுஸ்திரேலிய மத்திய பொலிஸாரின் ஆதரவுடன் விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி