செய்தி விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பொல்லார்ட் நியமனம்

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் 2027ஆம் பருவத்துக்கான தலைமைப் பயிற்றுவிப்பாளராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கீரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் 2027ஆம் பருவத்துக்கான தலைமைப் பயிற்றுவிப்பாளராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கீரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தனவுக்குப் பதிலாக பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி சனிக்கிழமை அறிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி T20 உலகக் கிண்ணத்தை வென்றபோதும், 2013 முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து IPL கிண்ணங்களை வென்றபோதும் பொல்லார்ட் முக்கியப் பங்காற்றியிருந்தார்.

மஹேல ஜயவர்தனவின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றிய பொல்லார்ட், ஜயவர்தன கடந்த வாரம் அந்தப் பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து தற்போது தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

IPL வரலாற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் திகழ்கிறது. இதுவரை ஐந்து முறை கிண்ணத்தை வென்றுள்ள அந்த அணி, கடைசியாகக் கிண்ணத்தை வென்ற பின்னர் கடந்த ஆறு பருவங்களில் நான்கு முறை பிளேஓப் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறியுள்ளது.

39 வயதான பொல்லார்ட் தனது நியமனம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், வீரராகவும் பின்னர் பயிற்றுவிப்பாளராகவும் இந்த அணியுடன் பயணித்த அனுபவம் தனக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“மும்பை இந்தியன்ஸ் அணி எதைக் குறிக்கிறது என்பதையும், அதன் நீலம் மற்றும் தங்க நிறங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் உள்ள பொறுப்பையும் நான் நன்கு புரிந்துகொண்டுள்ளேன்.

வீரர்கள் மற்றும் பயிற்சிக் குழுவினருடன் நெருக்கமாகப் பணியாற்றவும், அணியின் பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்தவும், திறமையான வீரர்களின் வளர்ச்சிக்கு உதவவும், ரசிகர்கள் மேலும் பல வெற்றிகளைக் கொண்டாடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கவும் எதிர்பார்த்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி