உலகம் செய்தி

புதிதாகத் திறக்கப்பட்ட பாலம் வழியாக சீனாவுக்கு சென்ற வடகொரிய ஜனாதிபதி

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், புதிதாகத் திறக்கப்பட்ட பாலம் வழியாக அண்டை நாடான சீனாவுக்குச் சென்று, அங்குள்ள டான்டோங் நகரைச் சென்றடைந்துள்ளதாக தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், புதிதாகத் திறக்கப்பட்ட பாலம் வழியாக அண்டை நாடான சீனாவுக்குச் சென்று, அங்குள்ள டான்டோங் நகரைச் சென்றடைந்துள்ளதாக தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

தென்கொரிய அரசாங்கத் தரப்பை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பில் தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சின் பேச்சாளர் உடனடியாகக் கருத்து வெளியிடவில்லை. சீன வெளிவிவகார அமைச்சும் இதுவரை பதிலளிக்கவில்லை.

சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில், டான்டோங் பகுதியில் அமைந்துள்ள முக்கியமான தரைவழி எல்லைக் கடப்புப் பகுதி இந்த மாதம் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக நிலவிய உறவுச் சிக்கல்கள் மற்றும் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மீண்டும் மேம்படுத்தும் முயற்சியாக இது அமைந்துள்ளது.

கிம் ஜோங் உன் இறுதியாக 2025 செப்டெம்பரில் சீனாவுக்குச் சென்றிருந்தார். அப்போது பீஜிங்கில் நடைபெற்ற 80ஆவது வெற்றி தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்ற அவர், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இதற்கிடையில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் கடந்த ஜூன் மாதம் வடகொரியாவுக்கு அரசமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டு வருவதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.

வடகொரியாவுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆர்வம் காட்டி வருகின்றார். எனினும், இந்த ஆண்டுக்குள் ட்ரம்ப் மற்றும் கிம் ஜோங் உன் இடையே சந்திப்பு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதாக அமெரிக்க மற்றும் தென்கொரிய அதிகாரிகள் கருதுவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஆசிய–பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) அமைப்பின் உச்சிமாநாடு அடுத்த மாதம் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி