டெல்லியில் விடுதி கட்டிடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு
தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் 6 மாடி கட்டிடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 06 ஆக அதிகரித்துள்ளது. தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் 6 மாடி கட்டிடம் மாணவர் விடுதியாக செயல்பட்டு வந்தது. டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்துக்கு அருகில் இக்கட்டிடம் அமைந்துள்ளதால் ஏராளமான மாணவர்கள் தங்கிப் படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கட்டிடம் நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் […]













