அரசியல் இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்க தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டு NPP அரசை மிரட்டுகிறார் சஜித்

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளைச் சுட்டிக்காட்டி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுத்துள்ளார்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளைச் சுட்டிக்காட்டி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இந்தச் சவாலை விடுத்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய எழுச்சியை ஒடுக்குவதற்காகவே இவ்வாறான சட்டமூலங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதாவது, மக்களிடமிருந்து அரசாங்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோன்று, அரசியல் எதிராளிகளை முடக்குவதற்கான முயற்சிகளும் இதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. ஜனநாயகம், அரசியல் உரிமைகள் மற்றும் சமூக உரிமைகள் ஆகியவற்றை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

ஜனநாயகத்தை அழிப்பதற்காக அல்ல, அதனை மேம்படுத்துவதற்காகவே ஆட்சிக்கு வருவதாக இந்த அரசாங்கம் கூறியிருந்தது. அந்த உறுதிமொழியை நம்பியே மக்கள் வாக்களித்தனர்.

தனவந்தர்களைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது மின்சாரக் கட்டணத்தையும் அதிகரிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல் முடிவுகளைப் பாருங்கள். மக்களுக்கான நலன்புரித் திட்டங்கள் இரத்து செய்யப்பட்டமை மற்றும் விலைவாசி அதிகரிப்பு ஆகிய காரணங்களால் அங்கு அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இலங்கையிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்குச் சவால் விடுக்கின்றோம். தேர்தலை நடத்தினால் நாட்டு மக்களின் தெளிவான நிலைப்பாடு என்னவென்பது தெரியவரும்” எனத் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை