இந்தியா செய்தி

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸை வென்ற இந்தியப் பெண்: மேயராகிறார் நித்யா ராமன்

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் வெற்றிபெற்று புதிய மேயராகத் தெரிவாகியுள்ளார்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் வெற்றிபெற்று புதிய மேயராகத் தெரிவாகியுள்ளார்.

நடைபெற்ற தேர்தலில் தற்போதைய மேயர் கரேன் பாஸைத் தோற்கடித்து நித்யா ராமன் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம் அமெரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரமான லொஸ் ஏஞ்சல்ஸின் மேயர் பதவியைப் பெறும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.

யார் இந்த நித்யா ராமன்?

1981ஆம் ஆண்டு இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிறந்த நித்யா ராமன், தனது ஆறு வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். தனது 22ஆவது வயதில் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்த அவர், பின்னர் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் (MIT) நகர்ப்புறத் திட்டமிடலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர், சென்னையில் நகர்ப்புற ஆய்வு அமைப்பொன்றை நிறுவி, சுகாதாரம் மற்றும் நகர்ப்புற அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார்.

2013ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸுக்குக் குடிபெயர்ந்த அவர், 2020ஆம் ஆண்டு அந்நகர சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

வீடற்றோர் பிரச்சினை, பொதுப் பாதுகாப்பு மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கான வீடமைப்பு வசதிகள் ஆகியவை அவரது தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சங்களாக அமைந்திருந்தன.

தேர்தல் முடிவுகள் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றுமொரு பெண் அமெரிக்காவின் முக்கிய நகரமொன்றின் மேயர் பதவியைப் பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி