இலங்கை செய்தி

இலங்கையின் கிராமிய அபிவிருத்திக்கு சர்வதேச ஆதரவைப் பெற முயற்சி

இலங்கையின் கிராமிய அபிவிருத்திக்கு சர்வதேச ஆதரவைப் பெற முயற்சி

2028–2030 காலப்பகுதியில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச விவசாய அபிவிருத்தி நிதியத்தின் (IFAD) ஆதரவை ப் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுலகத்தில் நடைபெற்றது.

இதன்போது இலங்கையின் விவசாய மற்றும் கிராமிய அபிவிருத்திக்காக முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய துறைகள் குறித்தும், சிறிய அளவில் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல், விவசாய உற்பத்தி திறனை மேம்படுத்துதல், கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தைச் செயற்படுத்துவதில், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “சமூக சக்தி” வேலைத்திட்டத்துடன் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதியின் செயலாளர் இங்கு வலியுறுத்தினார்.

மேலும், 2028–2030 காலப்பகுதியில் இலங்கையின் அபிவிருத்தித் தேவைகளுக்கு ஏற்ப IFAD இன் ஆதரவைப் பெறுவதற்காக அரசாங்கத்தின் முன்னுரிமைகளைக் கண்டறிவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கும் IFAD க்கும் இடையிலான ஒருங்கிணைப்பினை வலுப்படுத்தி, எதிர்காலத்தில் செயற்படுத்தக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களைக் கண்டறிந்து அவற்றைச் செயற்படுத்துவதற்கு அவசியமான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கலாநிதி தனுஷ்க பெரேரா, IFAD இன் உள்நாட்டுப் பிரதிநிதி Sherina Tabassum மற்றும் அந்நிறுவனத்தைச் சேர்ந்த போதி வன்னியாரச்சி, ஜானக அமரசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை