செய்தி விளையாட்டு

FIFA தலைவர் தேர்தலில் புதிய சர்ச்சை

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவர் ஜியானி இன்பான்டினோ, 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் நான்காவது முறையாகப் போட்டியிட முடியாது என FIFAவின் முன்னாள் நிர்வாகக் குழுத் தலைவர் மிகுவல் மதுரோ தெரிவித்துள்ளார்.

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவர் ஜியானி இன்பான்டினோ, 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் நான்காவது முறையாகப் போட்டியிட முடியாது என FIFAவின் முன்னாள் நிர்வாகக் குழுத் தலைவர் மிகுவல் மதுரோ தெரிவித்துள்ளார்.

FIFA விதிமுறைகளின்படி ஒருவர் அதிகபட்சம் மூன்று தவணைகள் மாத்திரமே தலைவர் பதவியை வகிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான தனது முதலாவது பதவிக்காலம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படக் கூடாது என இன்பான்டினோ வாதிட்டிருந்தார். இதனை FIFA கவுன்சிலும் 2022ஆம் ஆண்டு ஏகமனதாக ஏற்றுக்கொண்டிருந்தது.

இந்நிலையில், இன்பான்டினோ மீண்டும் போட்டியிடத் தகுதியற்றவர் என அறிவிக்குமாறு மனித உரிமைகள் அமைப்பான FairSquare, FIFAவின் 52 உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

2027 மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் காலக்கெடு நெருங்கிவரும் நிலையில், இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி