உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த தயாராகும் ட்ரம்ப்: அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றியைப் பெற்று, செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரு அவைகளிலும் தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டியுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றியைப் பெற்று, செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரு அவைகளிலும் தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டியுள்ளது.

குடியரசுக் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட பல மாநிலங்களிலும் ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றுள்ளதுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிராகப் பெருமளவிலான வாக்காளர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

குறிப்பாக, ஈரான் மீதான அமெரிக்காவின் போர் நடவடிக்கையால் வாழ்க்கைச் செலவு அதிகரித்தமை, பொருளாதார நெருக்கடி மற்றும் ட்ரம்பின் நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பான அதிருப்தி ஆகியவை ஜனநாயகக் கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

செனட் சபையில் குடியரசுக் கட்சியிடமிருந்த பல ஆசனங்களைக் கைப்பற்றிய ஜனநாயகக் கட்சி, குறைந்தது 54-44 என்ற பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. அதேவேளை, பிரதிநிதிகள் சபையிலும் குறைந்தது 30 ஆசனங்களை மேலதிகமாகக் கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் முதன்முறையாக, காங்கிரஸின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் புதிய உறுப்பினர்கள் பதவியேற்ற பின்னர், ட்ரம்ப் நிர்வாகத்தின் செயற்பாடுகள், குடும்பத்தினர் மற்றும் அரசியல் ஆதரவாளர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனநாயகக் கட்சி திட்டமிட்டுள்ளது. அத்துடன், முக்கிய சட்டமூலங்கள் தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகத்திடம் பல்வேறு சலுகைகளையும் கோர எதிர்பார்த்துள்ளது.

ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் சபைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ், தமது கட்சி மக்களின் நலன்களுக்காகச் செயற்படும் என்றும், ட்ரம்ப் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் பிரதிநிதிகள் சபை இயங்கிய காலம் முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தேர்தல் தோல்வி குறித்து கருத்து வெளியிட்ட ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டதுடன், அவர்கள் அழிவுகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகவும் எச்சரித்துள்ளார்.

ஈரான் மீதான போர் குடியரசுக் கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக ட்ரம்ப் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், அந்தப் போர் நடவடிக்கையைத் தொடர்ந்த தனது முடிவை அவர் நியாயப்படுத்தியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி