ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பசுபிக் பொலிஸ் கூட்டணியை உருவாக்குகிறது ஆஸ்திரேலியா

  • July 6, 2026
  • 0 Comments

பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் புதிய பசிபிக் பொலிஸ் கூட்டமைப்பு (Pacific policing bloc) வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா முதன்முறையாக நியூயார்க்கில் நடத்தும் ஐ. நா. பொலிஸ் தலைவர்கள் மாநாட்டில் (UNCOPS) , ஆஸ்திரேலியா பெரடல் பொலிஸ் ஆணையாளர் கிறிஸ்ஸி பாரெட் (Krissy Barrett) இந்த திட்டம் குறித்து தனது கருத்துக்களை முன்வைக்க உள்ளார். அமெரிக்க FBI இயக்குநர் காஷ் படேல் மற்றும் நியூயார்க் பொலிஸ் (NYPD) தலைவர் ஜெசிகா டிஷ் ஆகியோரையும் சந்திக்கவுள்ள ஆஸ்திரேலியா பெரடல் […]

பிரேசில் தேசத்திற்காக மொத்தம் 129 போட்டிகளில் விளையாடி, 80 கோல்களை அடித்துள்ள நெய்மர், அந்த நாட்டின் வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் (All-time leading scorer) என்ற பெருமையுடன் விடைபெறுகிறார். செய்தி விளையாட்டு

16 ஆண்டுகால பயணம் நிறைவு: கண்ணீருடன் விடைபெற்றார் நெய்மர்

  • July 6, 2026
  • 0 Comments

நார்வே அணியிடம் பிரேசில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து, பிரேசில் கால்பந்து வரலாற்றின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான நெய்மர் ஜூனியர் (Neymar Jr.) சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அவரது 16 ஆண்டுகால புகழ்பெற்ற சர்வதேச கால்பந்து பயணம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. பிரேசில் தேசத்திற்காக மொத்தம் 129 போட்டிகளில் விளையாடி, 80 கோல்களை அடித்துள்ள நெய்மர், அந்த நாட்டின் வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் (All-time leading […]

நார்வே அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கர் எர்லிங் ஹாலாண்ட் (Erling Haaland) இரண்டாம் பாதியில் அடித்த இரண்டு அதிரடி கோல்கள் இந்த வெற்றிக்கு வழிவகுத்தன. செய்தி முக்கிய செய்திகள் விளையாட்டு

அசுர பல அணியை வீழ்த்தி வரலாற்றில் இடம்பிடித்தது நோர்வே

  • July 6, 2026
  • 0 Comments

ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசில் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நார்வே அணி முதன்முறையாக காலிறுதிச் சுற்றுக்கு (Quarter-finals) தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. நார்வே அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கர் எர்லிங் ஹாலாண்ட் (Erling Haaland) இரண்டாம் பாதியில் அடித்த இரண்டு அதிரடி கோல்கள் இந்த வெற்றிக்கு வழிவகுத்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் பிரேசில் வீரர் புருனோ கைமரேஸ் (Bruno Guimaraes) தவறவிட்ட பெனால்டி வாய்ப்பு அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக […]

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

சிறைச்சாலை கலவரம் – இருவர் பலி: 33 பேர் காயம்

  • July 5, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காயமடைந்த 33 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இவருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளனர். சிறைக்குள் இன்று பிற்பகல் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவுவதற்காக காவல்துறை சிறப்பு அதிரடிப்படையை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அருகில் உள்ள பொலிஸ்நிலையங்களின் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர். கைதிகளின் உறவினர்கள் தற்போது சிறைச்சாலை வளாகத்தில் குவிந்துள்ளனர். அதேவேளை, […]

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான உடன்படிக்கையை சீர்குலைக்க இஸ்ரேலுக்கு அனுமதிக்கக் கூடாது என்று துருக்கி ஜனாதிபதி Tayyip Erdogan வலியுறுத்தியுள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமைதி முயற்சியை சீர்குலைக்க இஸ்ரேலுக்கு இடமளிக்க கூடாது – துருக்கி ஜனாதிபதி

  • July 5, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான உடன்படிக்கையை சீர்குலைக்க இஸ்ரேலுக்கு அனுமதிக்கக் கூடாது என்று துருக்கி ஜனாதிபதி Tayyip Erdogan வலியுறுத்தியுள்ளார். மத்திய கிழக்கில் அமைதிக்கான முயற்சிகள் பிராந்திய நாடுகளின் ஆதரவின்றி வெற்றியடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்தான்புல்லில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்புடன் (Shehbaz Sharif) இணைந்து உரையாற்றிய Erdogan, “பிராந்திய நாடுகளின் விருப்பத்திலிருந்தும் பங்களிப்பிலிருந்தும் பலத்தைப் பெறாத எந்தவொரு தீர்வும் நிலையானதாக இருக்க முடியாது” என்று கூறினார். “அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தத்தை சீர்குலைக்க […]

உலகம் செய்தி

நீதிகோரும் போராட்டத்தை ஈரான் கைவிடாது

  • July 4, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நீதி கோரும் போராட்டத்தை ஈரான் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi தெரிவித்துள்ளார். மறைந்த ஈரானின் உச்ச தலைவருக்குஅஞ்சலி செலுத்த பல்வேறு உலக நாடுகளின் பிரதிநிதிகள் வருகை தந்தது ஈரானிய மக்களின் பெருமையையும் வலிமையையும் உலகுக்கு பறைசாற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார். ” நீதி பெறுவது என்பது ஒரு நிலையான லட்சியமாக இருக்கும். மேலும், சர்வதேச தலைவர்களின் வருகையானது ஈரானின் அரசியல் அந்தஸ்தை உறுதிப்படுத்தியுள்ளது.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியலில் அரங்கேறும் குதிரை பேரத்தை தடுக்கு மாறுகோரி ஆளுநர் அர்லேகரிடம் , அதிமுகவினர் இன்று முறைப்பாட்டு மனு கையளித்தனர். செய்தி

தமிழக அரசியலில் குதிரை பேரம்: ஆளுநரிடம் முறைப்பாடு

  • July 4, 2026
  • 0 Comments

தமிழக அரசியலில் அரங்கேறும் குதிரை பேரத்தை தடுக்கு மாறுகோரி ஆளுநர் அர்லேகரிடம் , அதிமுகவினர் இன்று முறைப்பாட்டு மனு கையளித்தனர். ஆளுநரை சந்தித்து மனுவை கையளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அதிமுக மூத்த தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி , “குதிரை பேரம் தொடர்பாக ஏற்கெனவே ஆளுநர் மற்றும் சட்டப்பேரவை தலைவரிடத்தில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆளுநரிடம் மீண்டும் ஒரு மனுவை கொடுத்துள்ளோம்.” என்றார். ஆளுநருக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் மனுவின் […]

2026 ஜனவரி முதல் ஜுலை 03 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 58 ஆயிரத்து 810 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை

இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு: மரண எண்ணிக்கை அதிகரிப்பு

  • July 4, 2026
  • 0 Comments

இலங்கையில் கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் டெங்கு நோயால் 3 ஆயிரத்து 422 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2026 ஜனவரி முதல் ஜுலை 03 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 58 ஆயிரத்து 810 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. மேல் மாகாணத்திலேயே 30 ஆயிரத்து 876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த பாதிப்பில் 52.50 சதவீதமாகும். 142 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு, அதி அபாய டெங்கு […]

தொல்லியல் மற்றும் கலாசார மரபுத் தளங்களை உரிய முறையில் பாதுகாக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா வலியுறுத்தியுள்ளார். கல்வி செய்தி

கலாசார மரபுத் தளங்களை பாதுகாக்குமாறு பிரதி அமைச்சர் பணிப்பு

  • July 4, 2026
  • 0 Comments

தொல்லியல் மற்றும் கலாசார மரபுத் தளங்களை உரிய முறையில் பாதுகாக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா வலியுறுத்தியுள்ளார். திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்திற்கு பிரதி அமைச்சர் இன்று (04) நேரில் சென்று கள விஜயம் மேற்கொண்டார். இயற்கை பேரிடர்களால் சேதமடைந்திருந்த இத்தலம், கடந்த ஆட்சிக் காலங்களில் சில சமூக விரோதிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளால் மேலும் சேதப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொல்லியல் மற்றும் கலாசார மரபுத் தளத்தை உரிய முறையில் பாதுகாக்கவும், […]

அலி கமேனியின் செல்வாக்கு தலைமுறைகளைக் கடந்து நினைவுகூரப்படும் - என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் புகழாரம் சூட்டியுள்ளார். உலகம் செய்தி

அலி கமேனியின் செல்வாக்கு என்றும் நினைவுகூரப்படும் – பாகிஸ்தான் பிரதமர் உருக்கம்

  • July 4, 2026
  • 0 Comments

அலி கமேனியின் செல்வாக்கு தலைமுறைகளைக் கடந்து நினைவுகூரப்படும் – என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஒரு முக்கிய மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தானின் பிரதமர் , தெஹ்ரானில் நடைபெற்ற இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இதுகுறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் ஷெரீப், “அலி கமேனியின் ஞானம், தலைமைத்துவம் மற்றும் ஈரான் மீதும் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் மீதும் அவர் செலுத்திய செல்வாக்கு தலைமுறைகளைக் கடந்து நினைவுகூரப்படும்” என்று […]