இலங்கை செய்தி

இலங்கையுடனான உறவை வலுப்படுத்த ஆர்வம்: அமெரிக்காவின் புதிய தூதுவர் கடமையேற்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் மேயர், கடந்த 22ஆம் திகதி மாலையில் கொழும்புக்கு வந்தடைந்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் மேயர், கடந்த 22ஆம் திகதி மாலையில் கொழும்புக்கு வந்தடைந்துள்ளார்.

அவர் இலங்கைக்கான 29வது அமெரிக்கத் தூதுவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள எரிக் மேயர்,

“இலங்கையில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு கௌரவமாகும்.

நமது இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையிலான வலுவான அடித்தளத்தின் மீது, அமெரிக்க வணிகங்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.

நமது பகிரப்பட்ட பாதுகாப்பு நலன்களை மேம்படுத்தும், மற்றும் அமெரிக்கர்கள் மற்றும் இலங்கையர்கள் இருவருக்கும் பெரும் செழிப்பை வழங்கும் ஒரு அமெரிக்க-இலங்கை கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்ல நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் நோர்வேக்கான அமெரிக்கத் தூதரகத்தில் பொறுப்புத் தூதுவராகவும், அதற்கு முன்னர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தில் மூத்த பணியக அதிகாரியாகவும் கடமையாற்றியிருந்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை