உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு பதிலடி: ஈரான் எச்சரிக்கை

ஈரானின் பொருளாதாரப் பாதையை முடக்கும் வகையில் அமெரிக்காவால் விரிவாக்கப்பட்ட கூடுதல் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சபதம் செய்துள்ளது.

ஈரானின் பொருளாதாரப் பாதையை முடக்கும் வகையில் அமெரிக்காவால் விரிவாக்கப்பட்ட கூடுதல் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சபதம் செய்துள்ளது.

வாஷிங்டனின் இந்த நெருக்குதல் நடவடிக்கைகளுக்குத் தங்களின் முக்கிய வர்த்தகப் பங்காளிகள் எதிர்ப்புத் தெரிவிப்பர் என்றும் தெஹ்ரான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க திறைசேரிச் செயலாளர் (Treasury Secretary) ஸ்காட் பெசென்ட் இப்புதிய தடைகளை திங்கள்கிழமை அறிவித்தார்.

இருப்பினும், ஈரானுடன் தொடர் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் அமெரிக்க டாலர் அடிப்படையிலான நிதி அமைப்பிலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் எனக் கூறிய அவர், உடனடி கடுமையான தடைகளை விதிப்பதைத் தவிர்த்தார்.

பாதிக்கப்படவுள்ள நாடுகள் எவை என்பதையோ அல்லது இத்தடைகள் எப்போது அமுலுக்கு வரும் என்பதையோ குறிப்பிட மறுத்த பெசென்ட், புதிய உத்தரவுகளுக்கு இணங்குவதற்கு அந்நாடுகளுக்குக் கால அவகாசம் அளிக்கப்படும் என்றார்.

ஈரானின் எண்ணெய் வர்த்தகத்திற்கு உதவுவதாகச் சந்தேகிக்கப்படும் எந்தவொரு சீன நிதி நிறுவனங்களும் இதில் சேர்க்கப்படவில்லை என்றாலும், 60 தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் கப்பல்கள் மீது அமெரிக்க கருவூலத் திணைக்களம் புதிய தடைகளை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர், அமெரிக்காவின் எந்தவொரு பொருளாதார நடவடிக்கைக்கும் பதிலடியாக ராணுவ ரீதியிலான நடவடிக்கையையும், வளைகுடாப் பகுதியிலிருந்தான எண்ணெய் ஏற்றுமதியைக் குறைப்பையும் ஈரான் அச்சுறுத்தலாக விடுத்திருந்தது.

தடைகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பேசிய ஈரானிய பொருளாதார அமைச்சர் அலி மதனிசாதே, “அமெரிக்காவின் தடைகளை எதிர்கொள்ள நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

அரசுத் தொலைக்காட்சியில் பேசிய அவர், “எதிரிகள் எங்கள் மீது பொருளாதார தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ஆனால் எங்களிடமும் அதற்கான உத்திகள் உள்ளன; இந்த விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

எங்களின் தற்காப்பு நடவடிக்கை இனி வெறும் தற்காப்பாக மட்டும் இருக்காது; எதிரிகள் தாக்குதலுக்குக் காத்திருக்க வேண்டும்” என்றார்.

மேலும், சீனா அல்லது ரஷ்யா ஆகிய இரு நாடுகளுமே அமெரிக்காவின் இந்நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், பிற நாடுகளும் இதைக் கடுமையாக எதிர்க்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

ஈரானின் உள்கட்டமைப்புகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அமெரிக்காவின் முக்கிய நலன்கள் மற்றும் ஆற்றல் வள மையங்கள் (energy chokepoints) மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ஹொசைன் மொஹெபி எச்சரித்துள்ளதாக பிரஸ் டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் ஈரானும் அமெரிக்காவும் இடைக்கால அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் ‘இஸ்லாமாபாத் நினைவுக் குறிப்பு’ என்று அழைக்கப்படும் அந்த ஒப்பந்தம் விரைவிலேயே முறிவடைந்தது.

தெஹ்ரானுடன் நடைபெற்ற சமீபத்திய பேச்சுவார்த்தையில் “குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாக மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் ராணுவம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மோதல் மேலும் தீவிரமடைவதைத் தடுப்பது மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது போன்ற நடவடிக்கைகள் குறித்து இதில் கவனம் செலுத்தப்பட்டது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி