டெல்லியில் கனமழை ;166 விமானங்கள் தாமதம்
தலைநகர் டெல்லியில் கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சந்திப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை காரணமாக அங்கு விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக, பிரதான சாலைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தண்ணீர் தேங்கிய சாலைகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது; 166 விமானங்கள் தாமதமாகின.
ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, எய்ம்ஸ், அசோகா சாலை உள்ளிட்ட டில்லியின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கின.
அதேவேளை, டெல்லி முழுவதும் பல இடங்களில் மிதமான மழையும், ஆங்காங்கே கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வளிமணடளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நேற்றைய தினமும் கனமழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.




