இரத்மலானையில் பயிற்சி விமானம் விபத்து: தப்பினார் விமானி
கொழும்பு, இரத்மலான விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, பயிற்சி விமானி ஒருவரால் இயக்கப்பட்ட இலகுரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இரத்மலான விமானப் பயிற்சி பாடசாலையின் பயிற்சி விமானி ஒருவர் சற்று முன்னர் செஸ்னா -152 விமானத்தை தரையிறக்க முயன்ற போது, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் விமானம் சேதம் அடைந்துள்ள போதும், விமானி காயமின்றி தப்பியுள்ளார்.
விபத்தைத் தொடர்ந்து இரத்மலான விமான நிலையத்தின் ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
விமானத்தை அகற்றி, ஓடுபாதையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கான சீரமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.




