முதியோர் தொகை அதிகரிப்பு: பிறப்பு வீதம் வீழ்ச்சி – பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்தும் சீனா
சீனாவில் அதிகரித்து வரும் முதியோர்எண்ணிக்கை மற்றும் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை கருத்தில் கொண்டு, 2030ஆம் ஆண்டுக்குள் முதியோர் பராமரிப்பு மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்தவும், மேம்படுத்தவும் புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் புதிய திட்டத்தின்படி, முதியோர் பராமரிப்பு நிலையங்களின் வசதிகளை மேம்படுத்துவதுடன், குழந்தை பராமரிப்பு மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் முதியோர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள படுக்கைகளில் 73 சதவீதம் மருத்துவ மற்றும் பராமரிப்பு வசதிகளுடன் கூடிய படுக்கைகளாக மாற்ற […]













