பிலிப்பைன்ஸிற்கு அமெரிக்கா 02 பில்லியன் மதிப்பிலான நிதி மற்றும் இராணுவ உதவி
பிலிப்பைன்ஸிற்கு அமெரிக்கா 02 பில்லியன் மதிப்பிலான கடன் உதவி மற்றும் 400 மில்லியன் பெறுமதியான இராணுவ உதவியை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மணிலாவிற்கு மேற்கொண்ட பயணத்தின்போது இந்த இராணுவ உதவி தொகுப்பை அறிவித்திருந்தார்.
குறிப்பாக இந்த உதவித் திட்டமானது தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் செயல்பாட்டுத் திறனையும், தடுப்புத் திறன்களையும் வலுப்படுத்த வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
எவ்வாறாயினு் இந்த உதவி தொகுப்பானது பிலிப்பைன்ஸ் தனது சொந்த பாதுகாப்பில் அதிகப் பொறுப்பை ஏற்கத் தூண்டும் முயற்சி என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த நடவடிக்கையாது அமெரிக்க தளவாடங்கள் மீதான சார்பை ஆழப்படுத்தி, பிலிப்பைன்ஸின் தன்னிறைவுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று மற்றொரு தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




