இங்கிலாந்தில் இசை நிகழ்வை காணவந்தவர்களுக்கு நேர்ந்த துயரம் – 12000 பேர் வெளியேற்றம்
இங்கிலாந்தில் இசை நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பலருக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உள்ளரங்கு ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்வில் அடையாளம் தெரியாத மர்மப் பொருள் ஒன்று வெளிப்பட்டுள்ளது. அதனை வெளியேற்றிய பின்பே பலர் சுகவீனம் அடைந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் அரங்கில் கூடியிருந்த 12000 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் மென்செஸ்டரில் Manchester உள்ள கோ-ஆப் லைவ் Co-op Live அரங்கில், அமெரிக்க ராப் பாடகர் டான் டோலிவரின் Don Toliver இசை நிகழ்ச்சியிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டதாகவும், குறித்த மர்மப் பொருள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அரங்கத்தின் அதிகாரிகளும் பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாக அறிவித்துள்ளனர்.
அத்துடன் சுகவீனத்திற்கு உள்ளான சிலர் சுவாசநோய் அறிகுறிகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சிலர் கண் தொடர்பான முறைபாடுகளையும் தெரிவித்ததாக ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.




