இந்தியா செய்தி

இந்தியாவில் குடியுரிமைகோரும் 500 பாகிஸ்தான் இந்துக்கள்

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள 500 இந்துக்கள், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குமாறு இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள 500 இந்துக்கள், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குமாறு இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம், குண்டாவில் நடைபெற்ற ஸ்ரீ ராம கதா மகோத்சவத்தில் பங்கேற்ற அவர்கள், குடியுரிமை வழங்கப்படாத தங்களது நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.

ஜன் சத்தா தளம் தலைவரும், குண்டா தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜா பையா ஏற்பாடு செய்திருந்த இந்த ஆன்மிக நிகழ்வில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சிறப்பு முகாமில் தங்கியிருக்கும் 500 பாகிஸ்தான் இந்துக்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் 10 பேருந்துகளில் நேற்று ஜோத்பூருக்குத் திரும்பினர்.

இதன்போது ஹீராலால் என்பவர் தெரிவிக்கையில், 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து வெளியேறி ஜோத்பூரில் தஞ்சமடைந்த தாங்கள், அங்குள்ள சிறப்பு முகாமில் வசித்து வருவதாகவும், இதுவரை இந்திய குடியுரிமை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், குடியுரிமைச் சட்டத்தின் கீழ் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி