உலகம் செய்தி

முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: கிறிஸ்தவர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் – கரோலின் லீவிட்

உலகளவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 2035ஆம் ஆண்டளவில் கிறிஸ்தவர்களை விட அதிகரிக்கக்கூடும் என ஆய்வறிக்கை எச்சரித்துள்ள நிலையில், அமெரிக்க கிறிஸ்தவர்கள் திருமணம் செய்து அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் Karoline Leavitt வலியுறுத்தியுள்ளார்.

உலகளவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 2035ஆம் ஆண்டளவில் கிறிஸ்தவர்களை விட அதிகரிக்கக்கூடும் என ஆய்வறிக்கை எச்சரித்துள்ள நிலையில், அமெரிக்க கிறிஸ்தவர்கள் திருமணம் செய்து அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் Karoline Leavitt வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் ஊடகச் செயலாளரான கரோலின் லீவிட், வெள்ளிக்கிழமை சமூக ஊடகமான X தளத்தில் பகிர்ந்த பதிவில்,

“திருமணம் செய்து கொள்ளுங்கள், அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள், அவர்களை தேவாலயத்தில் வளர்த்து, அமெரிக்காவை நேசிக்கக் கற்றுக்கொடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய மத மக்கள் தொகை மாற்றம் தொடர்பாக வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையைத் தொடர்ந்து அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

2035ஆம் ஆண்டுக்கான மத மக்கள்தொகை கணிப்பு

Pew Research Center வெளியிட்ட கணிப்பின்படி, 2035ஆம் ஆண்டில் உலக முஸ்லிம் மக்கள்தொகை 257 கோடியாக அதிகரிக்கக்கூடும். அதே காலப்பகுதியில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 252 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில் உலகளவில் 227 கோடி கிறிஸ்தவர்களும், 202 கோடி முஸ்லிம்களும் இருந்ததாக ஆய்வு தெரிவிக்கிறது.

முஸ்லிம் மக்கள்தொகை வேகமாக அதிகரிப்பதற்கு பிறப்பு விகிதம் முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

2020–2025 காலப்பகுதியில் முஸ்லிம் பெண்களின் சராசரி குழந்தைப் பிறப்பு விகிதம் 3.1 ஆகவும், கிறிஸ்தவ பெண்களிடையே 2.5 ஆகவும் இருந்ததாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி