உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நிலக்கரி, எண்ணெய் விவகாரத்தில் முட்டுக்கட்டை:  காலநிலை மாநாடு தோல்வி  

COP31  காலநிலை மாநாட்டில் புதைபடிவ எரிபொருட்கள் தொடர்பான முரண்பாடுகளால் இறுதி உடன்பாடு எட்டப்படாத நிலையில், மாநாட்டின் பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை வகித்த அவுஸ்திரேலிய காலநிலை மற்றும் எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவென் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.
COP31  காலநிலை மாநாட்டில் புதைபடிவ எரிபொருட்கள் தொடர்பான முரண்பாடுகளால் இறுதி உடன்பாடு எட்டப்படாத நிலையில், மாநாட்டின் பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை வகித்த அவுஸ்திரேலிய காலநிலை மற்றும் எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவென் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.
சுமார் 200 நாடுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததையடுத்து, திட்டமிட்ட காலத்தை விட இரண்டு நாட்கள் தாமதமாக மாநாடு நிறைவடைந்தது.
அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியின் எரிசக்தி விவகாரப் பேச்சாளர் டான் டெஹான், மாநாட்டை நடத்துவதற்காக 150 மில்லியன் டொலர் பொதுமக்களின் பணம் செலவிடப்பட்டும், எதிர்பார்த்த முடிவை எட்ட முடியாததுடன், சர்வதேச அரங்கில் அவுஸ்திரேலியா அவமானமடைந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனவே, கிறிஸ் போவென் பதவி விலக வேண்டும் அல்லது பிரதமர் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், காலநிலை அமைப்புகளும் மாநாட்டின் தோல்விக்கு அவுஸ்திரேலியா மற்றும் துருக்கியின் தலைமைப் பொறுப்பைக் கடுமையாக விமர்சித்துள்ளன.
நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு பயன்பாட்டைக் குறைப்பது தொடர்பான தீர்மானத்தில் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகளே இறுதி உடன்பாடு தோல்வியடைய முக்கிய காரணமாக அமைந்தன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி