இலங்கை செய்தி

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த கஞ்சா தமிழகத்தில் சிக்கியது

இலங்கைக்குக் கடத்த முற்பட்ட 77 கிலோகிராம் கஞ்சாவுடன் பைபர் படகொன்று இந்தியக் கடலோரக் காவல் படையால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக்குக் கடத்த முற்பட்ட 77 கிலோகிராம் கஞ்சாவுடன் பைபர் படகொன்று இந்தியக் கடலோரக் காவல் படையால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம், பாம்பன் குந்துகால் கடற்கரைப் பகுதியில் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படையினர் இணைந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின்போதே இந்தக் கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 77 கிலோ கஞ்சா மற்றும் ஒரு பைபர் படகு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் தமிழகம் – மண்டபம் இந்தியக் கடலோரக் காவல் படை முகாமில் வைத்து மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை