உலகம் செய்தி

முதியோர் தொகை அதிகரிப்பு: பிறப்பு வீதம் வீழ்ச்சி – பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்தும் சீனா

சீனாவில் அதிகரித்து வரும் முதியோர்எண்ணிக்கை மற்றும் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை கருத்தில் கொண்டு, 2030ஆம் ஆண்டுக்குள் முதியோர் பராமரிப்பு மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்தவும், மேம்படுத்தவும் புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

சீனாவில் அதிகரித்து வரும் முதியோர்எண்ணிக்கை மற்றும் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை கருத்தில் கொண்டு, 2030ஆம் ஆண்டுக்குள் முதியோர் பராமரிப்பு மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்தவும், மேம்படுத்தவும் புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் புதிய திட்டத்தின்படி, முதியோர் பராமரிப்பு நிலையங்களின் வசதிகளை மேம்படுத்துவதுடன், குழந்தை பராமரிப்பு மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் முதியோர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள படுக்கைகளில் 73 சதவீதம் மருத்துவ மற்றும் பராமரிப்பு வசதிகளுடன் கூடிய படுக்கைகளாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சமூக அடிப்படையிலான முதியோர் பராமரிப்பு வசதிகளின் சேவைப் பரவலை 70 சதவீதமாக அதிகரிக்கவும், பழைய அரசாங்க முதியோர் பராமரிப்பு நிலையங்களில் சுமார் 2,000 நிலையங்களை புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

குழந்தை பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், அனைத்து மாவட்ட மட்ட நகரங்களிலும் குழந்தை பராமரிப்பு மையங்களை அமைக்கவும், 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பராமரிப்பு மையங்களில் சேர்க்கை விகிதத்தை 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதப் புள்ளிகளால் அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2 முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வகுப்புகளை நடத்துவதற்கு முன்பள்ளிகளை விரிவுபடுத்தவும், வேலைத்தளங்களில் குழந்தை பராமரிப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு நிறுவனங்களை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டங்களுக்காக மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு, உள்ளூராட்சி விசேட பத்திரங்கள் மற்றும் வர்த்தகக் கடன்கள் உள்ளிட்ட நிதி வழிகள் பயன்படுத்தப்படவுள்ளன. முதியோர் பராமரிப்பு நிலையங்களில் முன்கூட்டியே செலுத்தப்படும் கட்டணங்கள் தொடர்பான மோசடிகளைத் தடுப்பதற்கும் கண்காணிப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்படவுள்ளன.

கடந்த 2025ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து நான்காவது ஆண்டாகக் குறைந்ததுடன், பிறப்பு விகிதமும் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்திருந்தது. மேலும், முதியோர் சார்ந்த சார்பு விகிதம் குழந்தைகள் சார்ந்த சார்பு விகிதத்தை முதன்முறையாக முந்தியுள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி