ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவை சீர்குலைக்கும் ஈரானின் எந்த முயற்சியும் சகித்துக்கொள்ளப்படாது

  • May 5, 2026
  • 0 Comments

பிரித்தானிய சமூகத்தை சீர்குலைக்க ஈரான் மேற்கொள்ளும் எந்த முயற்சியையையும் சகித்துக்கொள்ள முடியாது என பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். டவுனிங் ஸ்ட்ரீட்-இல் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார். வடக்கு லண்டன் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, அதிகரித்து வரும் யூத-எதிர்ப்பை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பிரதமர் இந்த மாநாட்டில் உரையாற்றினார். கடந்த புதன்கிழமை கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் இரண்டு யூத ஆண்கள் கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகினர். அதே […]

உலகம் செய்தி

அணு ஒப்பந்தம் குறித்த அமெரிக்கா–ஈரான் பதற்றம் மீண்டும் அதிகரிப்பு

  • May 3, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான அணு ஒப்பந்த விவகாரம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. போர் நிறுத்தம் அல்லது புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டால், ஈரான் யுரேனியம் செறிவூட்டலை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் அணு ஆயுதம் பெறக்கூடாது என்று தொடர்ந்து கூறி வருவதுடன், அதனைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக, ஈரான் தங்கள் அணு திட்டம் முழுமையாக குடிமைப் பயன்பாட்டுக்காக மட்டுமே எனவும், மின்சாரம் […]

உலகம்

ஈரான் அணுவாயுதத்தை விரைவில் பயன்படுத்தும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

  • May 2, 2026
  • 0 Comments

ஈரான் இஸ்ரேல், மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக விரைவில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். புளோரிடாவில் நடந்த பேரணி ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஈரானை வழிநடத்த யாரும் விரும்பவில்லை என்றும், அமெரிக்க இராணுவம் அதன் தலைமைத்துவத்தின் பல அடுக்குகளை ஒழித்துவிட்டதால் பேச்சுவார்த்தைகள் கடினமாகிவிட்டன என்றும் அவர் கூறினார். அமெரிக்கா ஈரானை விட்டு வெளியேறக்கூடும், ஆனால் ஒரு முழுமையான […]

உலகம் செய்தி

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் “இயற்கை உரிமை” – துணை நாடாளுமன்ற சபாநாயகர் கருத்து

  • May 1, 2026
  • 0 Comments

ஈரானின் ஹோர்முஸ் நீரிணை குறித்த புதிய கருத்துகள் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. ஈரானிய துணை நாடாளுமன்ற சபாநாயகர் அலி நிக்ஸாத், ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்த ஈரானுக்கு இயற்கை உரிமை இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நீர்வழிப்பாதை அதன் முந்தைய நிலைக்கு மீண்டும் செல்லாது என்றும் அவர் கூறியுள்ளார். “ஹோர்முஸ் நீரிணை ஒரு சர்வதேச நீர்வழிப்பாதை அல்ல; அது ஈரானின் இயற்கை உரிமை” என்று ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய கருத்தில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த […]

உலகம்

ஈரானுக்கு எதிராக புதிய இராணுவத் திட்டங்களை வகுக்கும் அமெரிக்கா!

  • May 1, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான புதிய இராணுவத் திட்டங்கள் குறித்த உயர்மட்ட விளக்கங்களை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்ட்காம் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் (Brad Cooper) மற்றும் கூட்டுப் படைத் தலைமைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் (Dan Caine) ஆகியோரிடமிருந்து அவர் உயர்மட்ட ஆலோசனைகளை பெற்றுள்ளார். ஈரானிய உள்கட்டமைப்புகள் மீது சாத்தியமான “குறுகிய மற்றும் சக்திவாய்ந்த” தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியின் சில பகுதிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் […]

உலகம் செய்தி

பாதுகாப்பின்மைக்கு அமெரிக்க இராணுவமே காரணம் – ஈரான் உச்ச தலைவர் குற்றச்சாட்டு

  • April 30, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பின்மைக்கு அமெரிக்காவின் இராணுவ இருப்பும் அதன் கைப்பாவை தளங்களும் முக்கிய காரணம் என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி தெரிவித்துள்ளார். அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டணி ஈரான் மற்றும் பிராந்திய நாடுகளை இலக்குவைத்து மேற்கொண்ட தாக்குதல்களின் விளைவாகவே இந்நிலை உருவானதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்க வெளிநாட்டு படைகள் இருப்பது அந்தப் பகுதியின் பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், அமெரிக்காவின் ஆதரவிலுள்ள தளங்களுக்கு […]

உலகம் செய்தி

குளோபல் சுமுத் கப்பல் இடைமறிப்பு: இஸ்ரேலுக்கு இத்தாலி கண்டனம் – குடிமக்களை உடனே விடுவிக்க கோரிக்கை

  • April 30, 2026
  • 0 Comments

சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த குளோபல் சுமுத் கப்பல் குழுவை  இஸ்ரேல் இடைமறித்ததை இத்தாலி கடுமையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாங்க அறிக்கையில், குளோபல் சுமுத் கப்பல் குழுவின் கப்பல்கள் கைப்பற்றப்பட்டதை இத்தாலி கண்டிப்பதாகவும், சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து இத்தாலியர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு இஸ்ரேலை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாட்டாளர்களுக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி, 24 இத்தாலியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இத்தாலி செய்தி நிறுவனம் ஏஎன்எஸ்ஏ தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச சட்டம் முழுமையாக மதிக்கப்பட […]

உலகம்

ஈரானின் நாணய பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி!

  • April 30, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான நிலையற்ற போர் காரணமாக ஈரானின் நாணயம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் தேசிய நாணயமான ரியால், டொலருக்கு 1.8 மில்லியன் என்ற சாதனை அளவிலான வீழ்ச்சியைச் பதிவுசெய்துள்ளது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய போரின் ஆரம்ப வாரங்களில், நாட்டிற்குள் வர்த்தகமோ அல்லது இறக்குமதிகளோ குறைவாக இருந்ததால், ரியால் நாணயம் நிலையாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு ரியால் சரியத் தொடங்கி, நேற்று  சாதனை அளவிலான வீழ்ச்சியை எட்டியது. ரியாலின் வீழ்ச்சி பணவீக்கத்தை மேலும் தூண்டக்கூடும் […]

உலகம்

4 ஆண்டுகளில் இல்லாத உச்சம்!

  • April 30, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான துறைமுக முற்றுகை பல மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என எச்சரித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஜூன் 2022க்குப் பிறகு முதன்முறையாக ஒரு பீப்பாய் 120 டொலரைத் தாண்டியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருப்பது நீண்டகால மோதல்கள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

செய்தி

ரஷ்ய பயணத்தின் மூலம் உலகுக்கு செய்தி சொன்ன ஈரான்

  • April 28, 2026
  • 0 Comments

ஈரான் வெளியுறவு அமைச்சர் ஆரக்சியின் (Araghchi) ரஷ்யப் பயணம், அமெரிக்கா கூறுவது போல ஈரான் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதை உலகிற்கு காட்டும் முயற்சியென அரசியல் ஆய்வாளர் முகமது எல்மாஸ்ரி (Mohamed Elmasry) தெரிவித்துள்ளார். இந்தப் பயணம் வெறும் அடையாளப்பூர்வமான ராஜதந்திர நடவடிக்கை மட்டுமல்ல என கூறிய அவர் அதற்கு அப்பாற்பட்ட முக்கிய பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருக்கலாம் என்று அவர் கூறினார். குறிப்பாக, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கான மாற்று தரைவழிப் பாதைகள், எண்ணெய் சேமிப்பு நெருக்கடி, எதிர்கால பேச்சுவார்த்தை நிபந்தனைகள் மற்றும் […]