உலகம்

கோதுமை, சோயாபீன்ஸை ஈரானுக்கு ஏற்றுமதி செய்ய தயாராகும் அமெரிக்கா?

அமெரிக்க விவசாய ஏற்றுமதிகளுக்கு ஈரான் விரைவில் ஒரு புதிய சந்தையாக மாறும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உணவுப் பற்றாக்குறையால் அந்நாடு தவித்து வருவதால், கோதுமை, சோயாபீன்ஸ் மற்றும் மக்காச்சோளத்தை கொள்வனவு செய்வதற்கு  ஈரானிய நிதியை அமெரிக்கா பயன்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க விவசாயிகளுடனான கலந்துரையாடலில் ட்ரம்ப் இதனை அறிவித்துள்ளார்.

ஈரான்  உணவுப் பற்றாக்குறையால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக ட்ரம்ப் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், தெஹ்ரான் இந்தக் கூற்றை உடனடியாக நிராகரித்தது. ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், (Mohammad Bagher Ghalibaf) ட்ரம்ப் முடிந்த பேச்சுக்களையும், முறிந்த வாக்குறுதிகளையும் வழங்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்