செய்தி விளையாட்டு

நேஷன்ஸ் லீக் காலிறுதியில் ஸ்பெயின் – பிரான்ஸ் மோதல்; இங்கிலாந்துக்கு நோர்வே சவால் 

UEFA நேஷன்ஸ் லீக் காலிறுதிப் போட்டியில் நடப்பு உலக சம்பியன் ஸ்பெயின், பிரான்ஸை எதிர்கொள்ளவுள்ளதுடன், இங்கிலாந்து அணி நோர்வேயுடன் மோதவுள்ளது.

UEFA நேஷன்ஸ் லீக் காலிறுதிப் போட்டியில் நடப்பு உலக சம்பியன் ஸ்பெயின், பிரான்ஸை எதிர்கொள்ளவுள்ளதுடன், இங்கிலாந்து அணி நோர்வேயுடன் மோதவுள்ளது.

2026–27 UEFA நேஷன்ஸ் லீக் காலிறுதிப் போட்டிகளுக்கான குலுக்கல் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்றதைத் தொடர்ந்து, 8 அணிகளுக்கான போட்டி அட்டவணை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்பெயின் – பிரான்ஸ் மோதல் காலிறுதியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக அமைந்துள்ளது.

2026 உலகக் கிண்ண அரையிறுதியில் பிரான்ஸை 2–0 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்குச் சென்ற ஸ்பெயின், மீண்டும் பிரான்ஸை எதிர்கொள்ளவுள்ளது.

அதேவேளை, உலகக் கிண்ண காலிறுதியில்நோர்வேயை வீழ்த்திய இங்கிலாந்து, இம்முறை நேஷன்ஸ் லீக் காலிறுதியில் மீண்டும் நோர்வேயுடன் மோதவுள்ளது.

காலிறுதிப் போட்டிகள் மார்ச் 25 முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இரண்டு போட்டிகளிலும் பெறப்படும் மொத்த கோல்கள் அடிப்படையில் வெற்றி பெறும் அணிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.

அரையிறுதிப் போட்டிகளுக்கான வழித்தடம்

ஸ்பெயின் – பிரான்ஸ் போட்டியில் வெற்றி பெறும் அணி, நெதர்லாந்து – போர்த்துக்கல் போட்டியில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ளும்.

நோர்வே – இங்கிலாந்து போட்டியில் வெற்றி பெறும் அணி, பெல்ஜியம் – ஜெர்மனி போட்டியில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ளும்.

அரையிறுதிப் போட்டிகள் ஜூன் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், இறுதிப் போட்டி மற்றும் மூன்றாம் இடத்துக்கான போட்டி ஜூன் 13ஆம் திகதி நடைபெறவுள்ளன.

2023ஆம் ஆண்டு நேஷன்ஸ் லீக் கிண்ணத்தை வென்ற ஸ்பெயின், மீண்டும் சம்பியன் பட்டத்தை கைப்பற்றும் இலக்குடன் களமிறங்கவுள்ள நிலையில், நடப்பு சம்பியனான போர்த்துக்கல் தனது பட்டத்தைத் தக்கவைக்க கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி