உலகம்

எண்ணெய் விலை உயர்வு : ஈரான் , ஓமானின் கூட்டு நடவடிக்கை!!

  • April 27, 2026
  • 0 Comments

போரின் காரணமாக உலக பொருளாதாரம் நளிவுற்று வருகின்ற நிலையில் ஹார்மூஸ் ஜலசந்தி வழியான பாதுகாப்பான போக்குவரத்தை வழங்க ஈரான் மற்றும் ஓமான் இடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நீர்வழியில் உள்ள பொதுவான நலன்களைப் பாதுகாப்பதற்கு நிபுணர் மட்டத்திலான ஆலோசனைகளைத் தொடர ஈரானும் ஓமானும் ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araqchi) தெரிவித்தார். போரின் பொருளாதாரத் தாக்கம் ஆழமடைந்து வருவதால், உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் கடுமையாக பாதிப்படைந்துள்ள நிலையில் மேற்படி இணக்கம் […]

உலகம் செய்தி

போர் நிறுத்த முயற்சிகள் – கட்டார் பிரதமருடன் ஈரானின் வெளியுறவு அமைச்சர் பேச்சு

  • April 26, 2026
  • 0 Comments

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் குறித்து கட்டார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி உடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இஸ்லாமாபாத்திற்கு திரும்புவதற்கு முன்னதாக நடைபெற்ற இந்த உரையாடலில், போர் நிறுத்த முன்னேற்றங்களும் அதை வலுப்படுத்துவதில் உள்ள சவால்களும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதற்றத்தை குறைத்து, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஈரான் மேற்கொண்டு வரும் இராஜதந்திர முயற்சிகள் குறித்தும் அராக்சி விளக்கியுள்ளார். இந்நிலையில், […]

உலகம் செய்தி

போரால் ஈரானின் பொருளாதாரம் சீர்குலைவு – மக்கள் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு

  • April 26, 2026
  • 0 Comments

வாரக்கணக்கில் நீடித்த போரின் தாக்கத்தால், ஈரானின் உட்கட்டமைப்பும் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போரால் 3,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 125,000 க்கும் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. எஃகு மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் உள்ளிட்ட முக்கிய தொழில்கள் பாதிக்கப்பட்டதால், பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இதன் காரணமாக, இலட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். நிலையற்ற போர்நிறுத்தம் அமுலில் இருந்தாலும், மக்கள் அன்றாட வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

உலகம் செய்தி

ஈரானில் இணைய முடக்கம் 58 ஆவது நாளாக நீடிப்பு – தொழில்,வணிகம் பாதிப்பு

  • April 26, 2026
  • 0 Comments

ஈரானில் முழுமையான இணையத் தடை 58 ஆவது நாளாகத் தொடர்கிறது எனற இணையக் கண்காணிப்பு அமைப்பான NetBlocks தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தகவலுக்கமைய, இந்த இணைய முடக்கம் தொடர்ந்து 1368 மணிநேரத்தைக் கடந்து, தற்போது ஒன்பதாவது வாரமாக நீடித்து வருகிறது. ஜனவரி மாதத் தொடக்கத்தில் மீண்டும் உருவான அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர், கெடந்த பெப்ரவரி இறுதியில் மத்திய கிழக்கு போர் தொடங்கியதையடுத்து, இணையக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன. இந்த கடுமையான […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கு விவகாரம்: ரஷ்யா–பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை

  • April 24, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கின் தற்போதைய நிலவரம் குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாரும் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்‌ ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் முன்பாகவே இந்த உரையாடல் நடைபெற்றது. ஈரான்–அமெரிக்கா இடையிலான நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளில் இஸ்லாமாபாத் மேற்கொண்டு வரும் மத்தியஸ்தப் பங்கினை லாவ்ரோ பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த முயற்சிகளுக்கு மாஸ்கோ முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் ரஷ்ய வெளியுறவு […]

உலகம் செய்தி

அமெரிக்கா கப்பலை இடைமறித்தது சர்வதேச சட்ட மீறல் – ஈரான் குற்றச்சாட்டு

  • April 24, 2026
  • 0 Comments

‘தௌஸ்கா’ என்ற வர்த்தகக் கப்பலை அமெரிக்கா இடைமறித்தது சர்வதேச சட்ட மீறல் என்று ஐ.நா-வில் உள்ள ஈரானின் தூதரகம், குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக, ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா மேற்கொண்டதாக கூறப்படும் கடற்படை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த கப்பலின் பெயர் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கைக்கு பதிலளிக்காததால் அந்த கப்பல் இடைமறிக்கப்பட்டது என்று கூறியிருந்தார். ஆனால், ஈரானின் ஐ.நா தூதரகம் […]

உலகம் செய்தி

ஈரான் வெளியுறவு அமைச்சரின் பிராந்திய சுற்றுப்பயணம் – இஸ்லாமாபாத் விஜயம் உறுதி

  • April 24, 2026
  • 0 Comments

ஈரான் அரசு,  வெளியுறவு அமைச்சர் இன்று இரவு பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் பயணம் மேற்கொள்வதை உறுதி செய்துள்ளது. அவர் சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவின்படி, இந்தப் பயணம் ஒரு பிராந்திய சுற்றுப்பயணத்தின் பகுதியாகும். அதில் அவர் ஓமான் நாட்டின் மஸ்கட் நகருக்கும், ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கும் செல்கிறார். இந்தப் பயணங்களில் இருதரப்பு உறவுகள், பிராந்திய நிலவரங்கள் மற்றும் ஈரானைச் சுற்றியுள்ள தற்போதைய மோதல் நிலைமைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனினும், பாகிஸ்தானில் அமெரிக்கா […]

உலகம் செய்தி

ஈரான்–அமெரிக்கா பேச்சுவார்த்தை: முற்றுகையை நீக்க வேண்டும் என ஈரான் வலியுறுத்தல்

  • April 24, 2026
  • 0 Comments

ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான ஈரானிய தூதர், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டுமானால், அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர் பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியில்‌ கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில், அந்த முற்றுகை போர் நிறுத்த ஒப்பந்தத்தின் குறிப்பிடத்தக்க மீறல் என்று கூறினார். மேலும், மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும்போது ஈரானின் உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், அமெரிக்காவிடமிருந்து ஒரு யதார்த்தமான அணுகுமுறை […]

உலகம் செய்தி

ஈரானுடனான ஒப்பந்தம் அவசரம் இல்லை என்கிறது அமெரிக்கா

  • April 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா ஈரானுடன் ஒப்பந்தம்  மேற்கொள்ள எந்தவொரு அவசரமும் இல்லையென  அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை கருத்து தெரிவித்த போது அவர் இதனை கூறினார் ஈரானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் எங்களுக்கு உலகில் உள்ள அத்தனை நேரமும் உள்ளது, நாங்கள் ஒப்பந்தத்திற்காக ஆர்வமாக இல்லை என்று தெரிவித்தார். ஈரானின் அணுசக்தி திட்டத்தை கைவிடுவதை மையமாகக் கொண்ட எந்தவொரு உடன்படிக்கையும் தற்போது ஈரானின் கையில் இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த கருத்துகள்,  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]

உலகம் செய்தி

ஹோர்முஸ் நீரிணையில் பெரும் பதற்றம் : அமெரிக்கா–ஈரான் இடையே பேச்சுவார்த்தைகளும் தோல்வி

  • April 23, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணையை சுற்றியுள்ள இரு தரப்பு முற்றுகைகள் காரணமாக, சர்வதேச பேச்சுவார்த்தைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்காவும் ஈரானும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காத நிலையில், பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது. இந்த முற்றுகையால் ஏற்படும் பொருளாதார அழுத்தம், ஈரானை சமரசத்திற்கு கொண்டு வரும் என அமெரிக்கா நம்புகிறது. ஆனால், அதன் தாக்கம் பொதுமக்களின் வாழ்வில் தீவிரமாகப் பிரதிபலிக்கிறது. வேலை இழப்பு மற்றும் விலையேற்றம் குறித்து மக்கள் கவலை வெளியிடுகின்றனர். இந்நிலையில், ஈரான் தனது நிலைப்பாட்டை மாற்ற […]