உலகம்

ஈரானுக்கும் – சீனாவுக்கும் இடையில் ஆயுதங்கள் கைமாறியதா?

  • May 31, 2026
  • 0 Comments

மத்தியக் கிழக்கில் இடம்பெறும் மோதலில் அமெரிக்காவின் போர் விமானம் ஒன்றை ((F-15E ஸ்ட்ரைக் ஈகிள்) ஈரானிய படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த விமானத்தை சுட்டு வீழ்த்த சீனாவின் ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று புதிய தகவல் கசிந்துள்ளது. ஈரான் பயன்படுத்திய குறித்த ஏவுகணை  தோளில் வைத்து பயன்படுத்தப்படும் சிறந்த ஏவுகணையாக கருதப்படுகிறது. இந்த வகை ஏவுகணைகள், முறையாக மனிதனால் எடுத்துச் செல்லக்கூடிய வான் பாதுகாப்பு ஆயுதங்கள் அல்லது மேன்பேட்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை சுமார் ஏழு அடி நீளமும், […]

உலகம் செய்தி

ஈரானுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஹோர்மூஸில் அமெரிக்க முற்றுகை தொடரும் – ட்ரம்ப்

  • May 24, 2026
  • 0 Comments

“ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டு, சான்றளிக்கப்பட்டு, கையெழுத்திடப்படும் வரை, அந்த நீர்வழிப்பாதையில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை முழு வீச்சில் தொடரும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். “இரு தரப்பினரும் அவசரப்படாமல், நிதானமாகச் செயல்பட வேண்டும்,” என்று ட்ரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். “தவறுகளுக்கு இடமில்லை , ஈரானுடனான நமது உறவு மிகவும் தொழில்முறை சார்ந்ததாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் மாறி வருகிறது,” என்றும் அவர் மேலும் கூறினார்.

உலகம் செய்தி

போர் விவகாரத்தில் நிலைப்பாடு மாறாது – ஈரானின் மூத்த ஆய்வாளர் கருத்து

  • May 19, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகையால் ஈரானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும்,  அது தெஹ்ரானின் நிலைப்பாட்டை மாற்றவில்லை என மத்திய கிழக்கு மூலோபாய ஆய்வுகளுக்கான மையத்தின் மூத்த ஆய்வாளர் அபாஸ் அஸ்லானி  (Abas Aslani)தெரிவித்துள்ளார். அல் ஜசீராவுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார் பொருளாதார சிரமங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்தாலும், பாதுகாப்பு நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா பொருளாதார அழுத்தத்தின் மூலம் ஈரானை பேச்சுவார்த்தை மேசையில் தனது நிலைப்பாட்டை மாற்ற வைக்க […]

உலகம்

ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீக்கிய அமெரிக்கா!! ட்ரம்பின் புதிய நகர்வு!

  • May 19, 2026
  • 0 Comments

ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இப்போது சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் வொஷிங்டனுக்கு  சமாதானத் திட்டமொன்ற அனுப்பியதை தொடர்ந்து ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஈரான் அமெரிக்காவிற்கு ஒரு புதிய சமாதானத் திட்டத்தை அனுப்பிய பிறகு, ”  ஈரான் மீதான தாக்குதலை நாங்கள் நடத்த மாட்டோம். ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஒப்பந்தம் எட்டப்படாத பட்சத்தில், ஒரு நொடிப் பொழுதில் ஈரான் […]

உலகம்

ஈரான் மீதான போர் குறித்து நெதன்யாகு மற்றும் ட்ரம்ப் இடையே கலந்துரையாடல்!

  • May 18, 2026
  • 0 Comments

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு இராணுவ நடவடிக்கை தொடர்கின்ற நிலையில் அடுத்தக் கட்ட நகர்வு தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஈரானுடனான போரை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ட்ரம்பின் சமீபத்திய சீனப் பயணம் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் மத்தியக் கிழக்கு பகுதியில் மோதல் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

உலகம்

தீர்க்கப்படாத பிரச்சினைகள் – இன்னும் பல மாதங்களுக்கும் தொடரும் மோதல் போக்கு!!

  • May 14, 2026
  • 0 Comments

ஈரானுடனான மோதல், தீர்க்கப்படாத முக்கியப் பிரச்சினைகள் காரணமாக பல மாதங்களுக்குத் தொடர வாய்ப்புள்ளதாக  அமெரிக்காவின் முன்னாள் சிஐஏ இயக்குநரான லியோன் பனெட்டா (Leon Panetta) எச்சரித்துள்ளார். முக்கியமான உலகளாவிய எண்ணெய் கப்பல் போக்குவரத்துப் பாதையைக் கட்டுப்படுத்துவதன் மூலம், ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளது என்றும், அது நடைமுறையில் “நமது தலையில் துப்பாக்கியை வைத்திருப்பது” போல உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் அல்லது தரைப்படைகளை நிலைநிறுத்துவதன் செயல்திறனையும் அவர் […]

உலகம் செய்தி

அச்சுறுத்தலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார் – ஈரான் அறிவிப்பு

  • May 9, 2026
  • 0 Comments

அமெரிக்கா தனது “அச்சுறுத்தும் அணுகுமுறை” மற்றும் “விரிவாக்கப் போக்கை” மாற்றினால், ராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு தயார் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, தெரிவித்துள்ளார். துருக்கி, கட்டார், சவூதி அரேபியா, எகிப்து, ஈராக் மற்றும் அசர்பைஜான் வெளியுறவு அமைச்சர்களுடன் நடந்த தொலைபேசி உரையாடல்களில் அவர் இதை கூறியதாக அவரது அதிகாரப்பூர்வ டெலிகிராம் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், அமெரிக்கா தனது தற்போதைய அணுகுமுறையை மாற்றிக் கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்றும், இல்லையெனில் அச்சுறுத்தல் மற்றும் ஆத்திரமூட்டும் […]

உலகம்

ஈரானால் இன்னும் 04 மாதங்களுக்கு ஈடுகொடுக்க முடியும்!

  • May 8, 2026
  • 0 Comments

ஈரானால் இன்னும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு அமெரிக்காவின் முற்றுகையை தாங்கிக்கொள்ள முடியும் என புதிய பகுப்பாய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. ஈரான் போர் தொடர்பில் வெளியாகியுள்ள இரகசிய அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில்,  மிதக்கும் டேங்கர்களில் எண்ணெயைச் சேமித்து வைப்பது, எண்ணெய் வயல் ஓட்டங்களை நிர்வகிப்பது, மற்றும் தரைவழிப் பாதைகள் மூலம் எண்ணெயைக் கடத்துவது ஆகியவற்றிலிருந்து ஈரானின் இந்தத் தாக்குப்பிடிக்கும் திறன் உருவாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு, சீனாவுக்கு வழங்குவதற்காக ஈரானிடம் சுமார் […]

உலகம் செய்தி

ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த கடும் எச்சரிக்கை

  • May 5, 2026
  • 0 Comments

வர்த்தகக் கப்பல்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானை அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டால், அமெரிக்கா “அளவற்ற ஆயுத பலத்தை” பயன்படுத்தி பதிலடி கொடுக்கும் என அமெரிக்க பாதுகாப்புத் தலைவர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய கடற்படை நடவடிக்கையான “ஆபரேஷன் ப்ராஜெக்ட் ஃப்ரீடம்” மூலம் இந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். “அமெரிக்காவிலிருந்து உலகிற்கு ஒரு பாதுகாப்பு உறுதி வழங்கப்பட்டுள்ளது” என்றும் […]

உலகம் செய்தி

கப்பல் போக்குவரத்து மிகவும் ஆபத்தானது ஹோர்முஸ் வழித்தடம் குறித்து ஈரான் எச்சரிக்கை

  • May 5, 2026
  • 0 Comments

ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே உள்ள முக்கிய கடல் வழியான ஹோர்முஸ் நீரிணை குறித்து புதிய பதற்றம் உருவாகியுள்ளது. அமெரிக்கா முன்மொழிந்துள்ள புதிய கப்பல் வழித்தடம் பாதுகாப்பானதல்ல. அந்தப் பகுதி “பாறைகள் நிறைந்தது, ஆழமற்றது மற்றும் மிகவும் ஆபத்தானது” என்று ஈரான் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நீர்வழிப் பாதை சுமார் மூடப்பட்ட நிலைக்கு வந்ததால், உலக எரிபொருள் சந்தைகளில் பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எண்ணெய் விலைகள் உயர்ந்து, உலக பொருளாதாரத்தில் அதிர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. […]