ஈரானை தாக்க ஆயிரம் ஏவுகணைகள் தயார் – டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது மீண்டும் ஒருமுறை அச்சுறுத்தும் மற்றும் கடுமையான தொனியைப் பயன்படுத்தியுள்ளார்.
ஈரானைக் குறிவைத்துத் தாக்குவதற்கு 1,000 ஏவுகணைகள் தயாராக உள்ளதாக அவர் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் ஈரானின் அனைத்துப் பகுதிகளையும் முற்றிலுமாக அழிக்குமாறு அமெரிக்க இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஈரான் தன்னைக் கொன்றுவிடுவோம் என்ற தனது அச்சுறுத்தலை நிறைவேற்றினாலோ அல்லது கொல்ல முயற்சித்தாலோ கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் தனது அச்சுறுத்தலைச் செயல்படுத்த முயன்றால், மேலும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் ஏவப்படும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
ஈரான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பைக் கொலை செய்யத் திட்டமிடுவதாகக் கூறப்படும் உளவுத் தகவல்கள் தங்களிடம் இருப்பதாக இஸ்ரேல் சமீபத்தில் அவரிடம் தெரிவித்ததாக, ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ என்ற அமெரிக்க நாளிதழில் அண்மையில் செய்தி வெளியிட்டு இருந்தது.
மறுபுறம், அமெரிக்காவிடம் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு கோரிக்கை விடுக்கவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
மத்தியஸ்தர்களின் ஈரான் பயணத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம் என ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஈரானை தாக்க ஆயிரம் ஏவுகணைகள் தயார் – டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை




