உலகம் செய்தி

Starlink இணைய வசதியை பயன்படுத்தி உளவு பார்த்தோர் ஈரானில் கைது!

  • April 28, 2026
  • 0 Comments

ஈரானில் ஸ்டார்லிங்க் Starlink devices செயற்கைக்கோள் இணைய வசதியைப் பயன்படுத்தி உளவு வேலைகளில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தலைநகர் தெஹ்ரானில் குடியிருப்பொன்றில் ரகசியத் தளம் அமைத்து, வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர் என இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் முக்கியமான இடங்களைப் படம் பிடித்து மற்றும் காணொளிகளாக எடுத்து எதிரி நாடுகளின் ஊடகங்களுக்கு அனுப்பிய நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரானில் 60 நாட்களுக்கு மேலாக இணைய […]

உலகம் செய்தி

உலக அரங்கில் வலிமை இழந்த அமெரிக்கா: ஈரான் சுட்டிக்காட்டு!

  • April 28, 2026
  • 0 Comments

சுதந்திரமான நாடுகளின் கொள்கைகளில் தலையிடும் வலிமையை அமெரிக்கா இழந்துவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனவே, அமெரிக்காவால் இனி ஏனைய நாடுகளுக்கு கட்டளைகளை பிறப்பிக்க முடியாது என ஈரான் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Reza Talaei-Nik சுட்டிக்காட்டினார். அமெரிக்கா தனது சட்டவிரோதமான மற்றும் நியாயமற்ற கோரிக்கைகளைக் கைவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமைதி பேச்சுக்கான ஈரானால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய முன்மொழிவுகளை அமெரிக்கா பரிசீலித்து வரும்வேளையிலேயே ஈரான் தரப்பில் இருந்து இவ்வாறு கருத்து வெளியாகியுள்ளது. சர்வதேச அரசியல் சூழல் […]

உலகம் செய்தி

ஹிஸ்புல்லா அமைப்பின் இரும்புக் கோட்டைகள் அழிப்பு!

  • April 28, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பிற்குச் சொந்தமான ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புகளை இஸ்ரேலிய ராணுவம் தாக்கி அழித்துள்ளது. ஆயுத களஞ்சியசாலை, வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் உள்ளிட்டவையே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன என்று இஸ்ரேல் இன்று (28) தகவல் வெளியிட்டுள்ளது. அதேபோல ஏனைய சில இடங்களில் ஏராளமான துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் போன்ற போர் தளவாடங்களை இஸ்ரேலியப் படைகள் கைப்பற்றியுள்ளன. காசாவில் செயல்பட்ட Bislamach படைப்பிரிவே தற்போது தெற்கு லெபனானில் களமிறங்கி, அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் […]

இலங்கை செய்தி

“மாபியாக்களுடன் டீல் வைத்திருந்தால் என்னை புகழ்ந்திருப்பார்கள்” – வைரலாகும் வடக்கு ஆளுநரின் உரை

  • April 28, 2026
  • 0 Comments

“மாபியாக்களுடன் ‘டீல்’ வைத்திருந்தால், மோசடியாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கினால், செல்வாக்குள்ள சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்குச் செவிசாய்த்தால் அல்லது அவர்கள் கோருபவர்களுக்கு விரும்பிய இடமாற்றங்களை வழங்கினால் என்னை ஒரு நல்ல ஆளுநர் என்று பலரும் புகழ்வார்கள். ” இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். சரியானது எதுவோ அதைச் செய்தால் தூற்றுவார்கள். இப்படியானதொரு சவாலான சூழலுக்குள்தான் நீங்களும் பணியாற்றப் போகின்றீர்கள். யார் என்ன சொன்னாலும், நீங்கள் மக்கள் நலன் சார்ந்த சரியான விடயங்களையே செய்ய வேண்டும். நேர்மையாகச் […]

உலகம் செய்தி

துப்பாக்கிதாரிமீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைப்பு!

  • April 28, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயற்சி செய்தார் என கலிபோர்னியாவைச் சேர்ந்த 31 வயது இளைஞன்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வாஷிங்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை ஊடகவியலாளர் சங்க விருந்தின் போது, குறித்த நபர் ஆயுதங்களுடன் பாதுகாப்பு வளையத்தை மீறிச் சென்று, துப்பாக்கிச்சூடு நடத்தியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்தார், எனினும், அவர் அணிந்திருந்த கவச உடை அவரது உயிரைக் காப்பாற்றியது. அதேபோல ட்ரம்ப் உள்ளிட்டவர்கள் அங்கிருந்து […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை முடக்கத்தால் ஆசிய நாடுகளே பெரிதும் பாதிப்பு!

  • April 28, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் Penny Wong கவலை தெரிவித்துள்ளார். இந்த முக்கியமான நீர்வழிப்பாதை முடங்கியுள்ளதால், ஏனைய உலக நாடுகளைவிடவும் ஆசிய நாடுகள் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியை சந்திப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜப்பானிய அமைச்சருடனான சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான வர்த்தகத் தொடர்புகள் இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க உதவுகின்றது எனவும் Penny Wong கூறியுள்ளார். உலகளாவிய […]

இந்தியா செய்தி

இந்தியா, நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து!

  • April 28, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கைச்சாத்திடப்பட்டது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நியூஸிலாந்து வர்த்தக அமைச்சர் டாட் மெக்லே ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் கிடைக்கும் என்றும், இருதரப்பு வர்த்தகம் இருமடங்காக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் […]

இலங்கை செய்தி

பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா காலமானார்!

  • April 28, 2026
  • 0 Comments

பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா உடல்நலக் குறைவினால் இன்று (28) அதிகாலை 3 மணியளவில் சென்னையில் காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தனது இசைப்பாடல்களால் வலுச் சேர்த்த தேனிசை செல்லப்பா கடந்த 21ஆம் திகதி தனது 85 வது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார். 1980களில் இருந்து தமிழீழ தேசிய விடுதலைக்காக தனது இசைப்பாடல்களால் உழைத்தவர் தேனிசை செல்லப்பா. 1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், முற்றவெளியில் தொடங்கி, தமிழர் தாயகப் பகுதிகளில் எழுச்சிப் பாடல் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தார். புலம்பெயர் தேசங்களிலும் […]

செய்தி விளையாட்டு

பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

  • April 28, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறவுள்ள 40ஆவது லீக் ஆட்டத்தில் Punjab Kings , Rajasthan Royals ஆகிய அணிகள் மோதுகின்றன. நியூ சண்டிகர் முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளை குவித்து பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. நடப்பு […]

உலகம் செய்தி

அமைதிக்காக ரஷ்யா அனைத்தையும் செய்யும்: புடின் உறுதி!

  • April 28, 2026
  • 0 Comments

நாட்டின் இறையாண்மைக்காக போராடும் ஈரான் மக்களின் தற்துணிவை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பாராட்டியுள்ளார். ஈரான் வெளிவிவகார அமைச்சர் நேற்று தன்னை சந்தித்து பேச்சு நடத்தியபோதே அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார். அத்துடன், அமைதி முயற்சி வெற்றியளிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ரஷ்யா வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் ஏப்ரல் மாதம் எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தம் தற்போது கடற்படை முற்றுகை மற்றும் கப்பல் போக்குவரத்து சிக்கல்களால் பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது. அமைதி பேச்சில் பங்கேற்பதை […]