செய்தி விளையாட்டு

நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாதனை வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது T 20 போட்டியில் 38 பந்துகளில் 113 ஓட்டங்களைக் குவித்த அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது T 20 போட்டியில் 38 பந்துகளில் 113 ஓட்டங்களைக் குவித்த அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

T 20 கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனையான 118 ஓட்டங்களை விக்கெட் இழப்பின்றி முதல் ஆறு ஓவர்களில் இந்தியா குவித்தது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட T 20 தொடரில் இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றியது.

அபிஷேக் சர்மாவும் வைபவ் சூர்யவன்ஷியும் (19 பந்துகளில் 45 ஓட்டங்கள்) இணைந்து நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். முதல் விக்கெட்டுக்காக வெறும் 7.1 ஓவர்களில் 133 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளமிட்டனர்.

நியூசிலாந்து அணி நிர்ணயித்த 199 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இந்திய அணி 13.2 ஓவர்களிலேயே எட்டியது.

முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி, தொடர்ந்து மூன்றாவது போட்டியிலும் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ஓட்டங்களைப் பெற்றது.

டி20 சர்வதேசப் போட்டிகளில் புதிய உலக சாதனை!

இந்திய அணி முதல் ஆறு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 118 ஓட்டங்களைக் குவித்தது. பந்துக்குப் பந்து தரவுகள் கிடைக்கப்பெறும் டி20 சர்வதேசப் போட்டிகளில் இதுவே அதிகபட்ச பவர் பிளே ஓட்ட எண்ணிக்கையாகும்.

இதற்கு முன்னர், 2021ஆம் ஆண்டு செர்பியாவுக்கு எதிரான போட்டியில் ருமேனியா அணி 5.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 116 ஓட்டங்களைப் பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.

ஆறாவது ஓவரில் இந்தியா 18 ஓட்டங்களைப் பெற்றது. அந்த ஓவரில் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி ஷாட்களை வெளிப்படுத்தினார். குறிப்பாக, பவர் பிளேயின் கடைசிப் பந்தில் இரு கால்களையும் உயர்த்தி, டஃபி வீசிய பந்தை பாயிண்ட் திசைக்கு மேலாக சிக்ஸருக்கு அனுப்பினார்.

ஐந்து ஓவர்களில் 100 ஓட்டங்கள்

வெறும் ஐந்து ஓவர்களிலேயே இந்தியா 100 ஓட்டங்களைக் கடந்திருந்தது. அப்போது வைபவ் சூர்யவன்ஷி 11 பந்துகளில் 26 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அதில் மூன்று சிக்ஸர்களும் அடங்கின.

15 பந்துகளில் அரைச்சதம் – அபிஷேக்கின் புதிய சாதனை!

இதற்கு முன்னர் நியூசிலாந்துக்கு எதிராக 14 பந்துகளில் அரைச்சதம் பெற்றிருந்த அபிஷேக் சர்மா, மற்றொரு போட்டியில் 16 பந்துகளிலும் அரைச்சதம் அடித்திருந்தார்.

இம்முறை கைல் ஜேமிசன் வீசிய நான்காவது ஓவரில் இரண்டு பவுண்டரிகளையும் இரண்டு சிக்ஸர்களையும் விளாசிய அவர், 15 பந்துகளில் அரைச்சதத்தைப் பூர்த்தி செய்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி