கால்பந்து உலகில் அதிகாரப் போர்: FIFA தலைவருக்கு எதிராக UEFA வழக்கு தொடுப்பு
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற FIFA அமைப்பின் தலைவர் ஜியானி இன்பான்டினோவின் (Gianni Infantino) முயற்சி தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, சர்வதேச கால்பந்து அமைப்புகளுக்கு இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. FIFA வின் இந்த சர்ச்சைக்குரிய திட்டத்தைத் தொடர்ந்து, அது தொடர்பான மின்னஞ்சல்கள், ஆவணங்கள் மற்றும் தரவுகள் எதையும் அழிக்காமல் பாதுகாக்குமாறு (Preservation Letter) ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான யுவேபா (UEFA), FIFA வுக்கு அதிகாரப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. […]













