ரயிலுடன் பேருந்து மோதி கோர விபத்து – மூவரின் நிலை கவலைக்கிடம்
ஹபராதுவ பகுதியில் ரயில் கிராசிங்கில் பேருந்து ஒன்று ரயில் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இதில் 06 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




