இந்தியா செய்தி

உலகளாவிய நெருக்கடிகளில் ஐ.நா. பார்வையாளராக இருக்கக்கூடாது: இந்தியா வலியுறுத்து

உலகளாவிய நெருக்கடிகளைத் தீர்ப்பதில் ஐக்கிய நாடுகள் சபை தலைமைத்துவத்துடன் செயல்பட வேண்டுமே தவிர, வெறும் பார்வையாளராக இருக்கக்கூடாது என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

உலகளாவிய நெருக்கடிகளைத் தீர்ப்பதில் ஐக்கிய நாடுகள் சபை தலைமைத்துவத்துடன் செயல்பட வேண்டுமே தவிர, வெறும் பார்வையாளராக இருக்கக்கூடாது என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், ஐ.நா.வின் கட்டமைப்பில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், உக்ரைன் மற்றும் மேற்காசியாவில் தொடரும் போர்களால், அந்த மோதல்களுடன் நேரடித் தொடர்பில்லாத நாடுகளும் மக்களும் பொருளாதாரப் பாதிப்புகளை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டார்.

உலகின் பல பகுதிகளில் அதிகரிக்கும் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் உள்ளிட்ட பொருளாதாரப் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டிய அவர், சர்வதேச சமூகம் இவ்வாறான நெருக்கடிகளைக் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது என்றார்.

மேலும், போர்களுக்குத் தீர்வு காண்பதற்கு இராணுவ நடவடிக்கைகளை விடப் பேச்சுவார்த்தைகளும் இராஜதந்திர முயற்சிகளுமே அவசியம் எனத் தெரிவித்த ஜெய்சங்கர், இந்த முயற்சிகளில் இந்தியா ஏனைய நாடுகளுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபை உள்ளிட்ட சர்வதேசத் தீர்மானங்களை மேற்கொள்ளும் அமைப்புகளில் சீர்திருத்தங்கள் அவசியம் என வலியுறுத்திய அவர், குறிப்பாக உலகளாவிய தெற்கு நாடுகளின் குரல்களும் தீர்மானம் எடுக்கும் செயல்முறைகளில் உரிய இடத்தைப் பெற வேண்டும் என்றார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி