பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இலங்கை, சீனா ஆராய்வு
இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள Wei Huaziang , பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று ( 22) பாதுகாப்பு அமைச்சில் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடலில், பாதுகாப்புச் செயலாளரும் சீன தூதுவரும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
அத்துடன், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தினர்.
இலங்கைக்கு சீனா தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு பாதுகாப்புச் செயலாளர் தனது ஆழ்ந்த நன்றியையும் தெரிவித்தார்.
சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் Fu Xiao வும் இச்சந்திப்பில் பங்கேற்றார்.





