இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு: 9 பேர் விடுவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 24 பேரில் 15 பேர் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏனைய 9 பேர் போதியளவு சாட்சியங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 24 பேரில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 9 பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 24 பேர் மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நிரந்தர ‘ட்ரயல்-அட்-பார்’ (Permanent Trial-at-Bar) அமர்வு வழங்கி வருகிறது.

தாக்குதல்களுக்குச் சதி செய்தல் மற்றும் அதற்குத் துணைபுரிதல் உள்ளிட்ட 23,270-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.

குற்றம்சாட்டப்பட்ட 24 பேரில் 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய ஒன்பது பேர் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் முக்கிய கூட்டாளியாகப் புலனாய்வாளர்களால் அடையாளம் காணப்பட்ட நௌபர் மௌலவியும் தண்டனை பெற்றவர்களில் அடங்குகின்றார்.

நீதிமன்றம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கான தண்டனைகளை அறிவிப்பதற்காக விரைவில் மீண்டும் கூடவுள்ளது.

நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை