22 ஆவது திருத்தச்சட்டமூலம்மீது 25 ஆம் திகதி வாக்கெடுப்பு
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் மீது நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 7 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த சட்டமூலம் அரசியலமைப்புடன் முரண்படவில்லை என்பதால் பொது வாக்கெடுப்பு தேவையில்லை என்றும், மூன்றில் இரண்டு சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்றும் தீர்ப்பளித்திருந்தது.
உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு நேற்று நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 22வது திருத்தச் சட்டமூலம் குறித்து 24 மற்றும் 25ஆம் திகதிகளில் விவாதம் நடத்த முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இரண்டு நாள் விவாதத்தின் பின்னர், வரும் 25ஆம் திகதி இரவு 7 மணிக்கு வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




